போதைப் பொருளுக்கு அடிமையான ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரான வாரிசு நடிகர்

By Siva

மும்பை: நடிகை ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலரும், நடிகருமான பிரத்தீக் பாபர் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதில் இருந்து மீண்டு வருகிறார்.

ஜானே து யா ஜானே நா படம் மூலம் நடிகரானவர் பிரத்தீக் பாபர். பிரபல நடிகர் ராஜ் பாபர், நடிகை ஸ்மிதா பாட்டிலின் மகன். விண்ணைத் தாண்டி வருவாயா இந்தி ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரத்தீக். த்ரிஷா கதாபாத்திரத்தில் ஏமி ஜாக்சன் நடித்தார்.

இந்த படத்தில் நடிக்கும்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. பிரத்தீக்கின் பெயரை கையில் பச்சை குத்தினார் ஏமி. பின்னர் பிரத்தீக்கும், ஏமியும் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு பிரத்தீக் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

போதைப் பொருள்

போதைப் பொருள்

நான் போதைப் பொருளுக்கு அடிமையானேன். அதில் இருந்து வெளியே வர போராடிக் கொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் உண்மை பற்றி ரசிகர்களுக்கு தெரிய வேண்டும் என்றே இதை வெளிப்படையாக கூறுகிறேன்.

குற்ற உணர்ச்சி

குற்ற உணர்ச்சி

போதைக்கு அடிமையாகியும் நம்மை சுற்றியுள்ளவர்கள் அளவு கடந்த அன்பை காட்டுவது குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. நான் படங்களில் நடிக்காமல் இருந்த இத்தனை ஆண்டுகள் நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கிறார்கள்.

பிரச்சனை

பிரச்சனை

நான் மகிழ்ச்சியாக இல்லை. எனக்கு நானே உண்மையாக இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையாக இருந்தேன். அது பெரிய பிரச்சனை. நான் ஒன்றும் உத்தமன் அல்ல என்பது ரசிகர்களுக்கு தெரிய வேண்டும்.

புத்தகம்

புத்தகம்

போதைப் பொருளுக்கு அடிமையாகி மீண்டு வருவது குறித்து நான் பலரிடம் கூறியுள்ளேன். அனைவரும் எனக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள். இது குறித்து புத்தகம் எழுதும் திட்டம் உள்ளது என்றார் பிரத்தீக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X