பிரதாப் போத்தனுக்கு இன்று பிறந்த நாள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து!

கொச்சி : தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் சிறந்த நடிகராகவும், சிறந்த இயக்குனராகவும் இருந்து வரும் பிரதாப் போதன் தமிழில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்திருந்த பிரதாப் போத்தன் இன்றுவரை பல படங்களில் நடித்து மக்களிடையே மிகப் பிரபலமாக உள்ளார்.

கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சிறந்த நடிகராக வலம் வரும் பிரதாப் போத்தன் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் பல்வேறு பிரபலங்களும் தற்போது இவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தொலைபேசி மூலமும் பகிர்ந்து வருகின்றனர்.

தன்னிகரற்ற திரை பிரபலமாக

தன்னிகரற்ற திரை பிரபலமாக

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வரும் பிரதாப் போத்தன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தும், இயக்கியும் உள்ளார்.

வில்லனாகவும் நடித்து

வில்லனாகவும் நடித்து

மலையாள திரைப்படங்களின் மூலம் அறிமுகமாகி நடித்துக் கொண்டிருந்த பிரதாப் போத்தன் தமிழில் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய "அழியாத கோலங்கள்" திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த பிரதாப் போத்தன் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார்.

சிறந்த இயக்குனராகவும்

சிறந்த இயக்குனராகவும்

மீண்டும் ஒரு காதல் கதை என்ற தமிழ் படத்தை இயக்கி நடித்ததுடன் ஜீவா, வெற்றிவிழா, மைடியர் மார்த்தாண்டன், சீவலப்பேரி பாண்டி மற்றும் லக்கிமேன் உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தமிழில் இயக்கி சிறந்த இயக்குனராகவும் தமிழ் மக்களிடையே பிரபலமானார்.

நீதிபதியாக நடித்து

நீதிபதியாக நடித்து

இயக்குனராகவும் நடிகராகவும் விளங்கி வரும் பிரதாப் போத்தன் இன்று வரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதை தொடர்ந்து சமீபத்தில் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் நீதிபதியாக நடித்து அனைவரையும் கவர்ந்து இருந்தார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இந்திய சினிமாவில் இயக்குனர், நடிகர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என தன்னிகரற்ற திரை பிரபலமாக விளங்கி வரும் பிரதாப் போத்தன் ஆகஸ்ட் 13 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்களும் தற்போது இவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தொலைபேசி மூலமும் பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X