'இதோட நிறுத்திக்கோ' பிரபல நடிகரின் சகோதரியிடம் கொரோனா குறும்பு.. பீதி கிளப்பியவருக்கு எச்சரிக்கை!

By

சென்னை: தனது சகோதரியிடம், கொரோனா பீதி கிளப்பியவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரபல நடிகர்.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தாலி மற்றும் அமெரிக்காவில் ஏராளமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூர வைரஸைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் கடும் முயற்சிகளை எடுத்து வருகின்றன.

நீடிக்கப்படும்?

நீடிக்கப்படும்?

இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வரும் 14 ஆம் தேதிவரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. பொதுமக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகளும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர்.

கடுமையான இருமல்

கடுமையான இருமல்

இந்நிலையில், பிரபல இயக்குனரும் நடிகருமான பிரதாப் போத்தனின் சகோதரிக்கு ஒரு போன் கால் சென்றுள்ளது. அதில் பேசிய நபர், பிரதாப் குரலில் மிமிக்ரி செய்து, கடுமையாகத் தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்திருக்கிறார். கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று பீதியை கிளப்புவதற்காக, இதை செய்துள்ளார். இதுபற்றி பிரதாப் போத்தன், தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

தனியாக வசிக்கிறார்

தனியாக வசிக்கிறார்

அதில், எனது சகோதரி இத்தாலியில் வசித்து வந்தார். கொரோனா பரவுவதற்கு முன்பே கேரளா வந்துவிட்டார். நான் சென்னையில் வசிக்கிறேன். அவர் கேரளாவில் தனியாக வசிக்கிறார். இதற்கிடையே என்னை போலவே மிமிக்ரி செய்துள்ள ஒரு நபர், (அவர் சினிமாவில் தோல்வியடைந்த நடிகர்) அவருக்கு போன் செய்து தொடர்ந்து இறுமிக்கொண்டே, பீதியை ஏற்படுத்தி இருக்கிறார்.

சட்டப்படி நடவடிக்கை

சட்டப்படி நடவடிக்கை

என் சகோதரி, யார் என்று கேட்டதற்கு, பிரதாப் என்று அடிக்கடி கூறியிருக்கிறார். பிறகு அந்த லைனை கட் பண்ணிவிட்டு, எனக்கு போன் செய்தார் சகோதரி. நான் குளித்துக் கொண்டிருந்ததால், போனை உடனடியாக எடுக்கவில்லை. பிறகு நான் போன் செய்த போது, இந்த தகவல் தெரியவந்தது. அவர் யார் என்பது தெரிந்துவிட்டது. தொடர்ந்து அந்த நபர் இப்படி செய்தால் சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார் பிரதாப் போத்தன்.

அழியாத கோலங்கள்

அழியாத கோலங்கள்

தமிழில், மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, வெற்றிவிழா, மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி உட்பட சில படங்களை இயக்கியவர், பிரதாப் போத்தன். அழியாத கோலங்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மூடுபனி, பன்னீர்புஷ்பங்கள், தில்லுமுல்லு, வாழ்வே மாயம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X