Pratheep Antony: ஹீரோவாகும் பிரதீப் ஆண்டனி..? எல்லாம் பிக் பாஸ் கொடுத்த வாழ்வு... விரைவில் அப்டேட்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ரெட் கார்டு வாங்கி வெளியேறியவர் பிரதீப் ஆண்டனி. மாயா, பூர்ணிமா, நிக்ஸன் கேங் செய்த கோல்மால் சேட்டைகளால் தான் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதாக அவரது ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். இந்நிலையில் பிரதீப் ஆண்டனி விரைவில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோவாகும் பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி
அருவி படத்தில் பீட்டர் என்ற கேரக்டரில் நடித்து கவனம் ஈர்த்தவர் பிரதீப் ஆண்டனி. அதன்பின்னர் சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். கடைசியாக கவினின் டாடா படத்தில் காமெடி ரோலில் நடித்த அவருக்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் நாளில் இருந்தே பிக் பாஸ் ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்தார் பிரதீப் ஆண்டனி.

 Pratheep Antony: Bigg Boss fame Pradeep Antony will soon play the hero in a Movie

இதனால் முதல் வாரத்தில் இருந்தே பிரதீப் ஆண்டனிக்கு பெரிய ரசிகர் பட்டாளம் கிடைத்தது. அதேபோல் ஆரம்பம் முதலே இந்த சீசனின் டைட்டில் வின்னர் பிரதீப் ஆண்டனி தான் என டிவிட்டரில் ட்ரெண்டிங் ஆனது. ஒருகட்டத்தில் பிரதீப் ஆண்டனியின் அசுர வளர்ச்சியை கண்டு பயந்துபோன மாயா, பூர்ணிமா, நிக்சன், ஐஸு, ஜோவிகா உள்ளிட்ட சிலர் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற காரணமாகினர்.

இதனால் பிக் பாஸ் டைட்டில் கிடைக்காத போதும் பிரதீப் ஆண்டனிக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக அவரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியதற்காக கமல்ஹாசனை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வந்தனர். அதேபோல் மாயா, பூர்ணிமா குழுவினரை புல்லி கேங் என ஹேஷ்டேக் போட்டு ட்ரெண்ட் செய்தனர்.

அதேநேரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் பிரதீப் ஆண்டனி டிவிட்டரில் தொடர்ந்து பல சம்பவங்கள் செய்து வந்தார். டைட்டில் வென்றிருந்தால் கூட பிரதீப் ஆண்டனிக்கு இவ்வளவு சப்போர்ட் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அந்தளவிற்கு பிரதீப் ஆண்டனியின் பிக் பாஸ் வைப் ரசிகர்களை ஆக்கிரமித்து இருந்தது. இந்நிலையில் விரைவில் ஹீரோவாக ஒரு படத்தில் கமிட்டாகவுள்ளாராம் பிரதீப்.

இயக்குநராக வேண்டும் என்பது தான் தனது கனவு என பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் முன்பு கமல்ஹாசனிடம் கூறியிருந்தார் பிரதீப் ஆண்டனி. அதற்காக கதை எழுதி வைத்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது பிரதீப் ஆண்டனிக்கு ஹீரோ சான்ஸ் தேடி வந்துள்ளது. இந்தப் படம் பற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X