»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

பிரபல நடிகை பிரதியுக்ஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், அவரை பல பேர் கற்பழித்துக்கொன்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

பாரதிராஜாவின் கடல்பூக்கள் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை பிரதியுஷா. இவர் பல ஆண்டுகளாக சித்தார்த்தரெட்டி என்பவரை காதலித்து வந்தார்.

ஆனால் அவருடைய காதலரின் வீட்டில் எதிர்க்கவே ஞாயிற்றுக்கிழமை பிரதியுஷாவும், அவரது காதலர் சித்தார்த்தரெட்டியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து காரில் இருந்த படியே ஏற்கனவே வாங்கி வந்த தூக்கமாத்திரையை சாப்பிட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. பின்னர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாககூறப்பட்டது.

மரணமடைந்த தினத்தன்று அவர் பெங்களூருக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அதற்காக காலையில் ஹைதராபாத்தில்உள்ள பஞ்சகுட்டா என்ற இடத்தில் உள்ள பியூட்டி பார்லருக்கு அலங்காரம் செய்து கொள்ள சென்றுள்ளார்.

அங்கிருந்தபடியே சித்தார்த்த ரெட்டியை போனில் அழைத்து பேசியுள்ளார். பிறகு சித்தார்த்த ரெட்டி பியூட்டிபார்லருக்கு சென்று பிரதியுக்ஷாவை கூட்டிச் சென்றுள்ளார். பிறகு 2 மணி நேரம் என்ன நடந்தது என்றுதெரியவில்லை.

இந்த நேரத்தில் ஒரு கும்பல் இருவரையும் கடத்திச் சென்று பிரதியுஷாவைக் கற்பழித்திருக்கலாம் என்றுகருதப்படுகிறது. இக் கும்பலை சித்தார்த்த ரெட்டியின் வீட்டினர் தான் அனுப்பியிருப்பார்களோ என்றுசந்தேகிக்கப்படுகிறது.

அதன்பிறகே சித்தார்த்த ரெட்டி மருத்துவமனைக்குச் சென்று நாங்கள் இருவரும் தூக்கமாத்திரை சாப்பிட்டுள்ளதாககூறி, மருத்துவனையில் மயக்கமடைந்துள்ளார். விசாரணையில் விஷம் அருந்தியிருந்தது தெரியவந்தது.

கற்பழித்த கும்பலே இருவருக்கும் விஷம் தந்திருக்கலாம் எனவும் தனது குடும்பத்தினர் பிரச்சனையில் சிக்குவதைத்தடுக்க நாங்கள் தான் தூக்க மாத்திரை சாப்பிட்டோம் என ரெட்டி மருத்துவர்களிடம் கூறியிருக்கலாம் எனவும்கருதப்படுகிறது.

போலீசார் என்ன காரணத்தினாலோ இந்த மரணத்தை தற்கொலை என்று பதிவு செய்து விட்டு வழக்கை முடிக்கப்பார்த்துள்ளனர்.

ஆனால், பிரதியுஷாவின் தாயாரா சரோஜினியும், பத்திரிக்கைகளும் அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாககூறியதையடுத்து பிரதியுஷாவின் உடல் 2வது முறையாக ஹைதராபாத் காந்தி மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அவரது தொடை, கழுத்து, கை, மார்பகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. உடல் முழுவதும்நகக் கீறல்களும் மற்றும் பல்லால் கடித்த காயங்களும் இருந்தன. மேலும் அவரது உள்ளாடைகள்கிழிக்கப்பட்டிருப்பதாகவும் அவரை பல பேர் கற்பழித்திருக்கலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரதுபிறப்பிறுப்பில் விந்து உறைந்த நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அவரது உடல் உறுப்புகள் தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் தான் முழுவிவரம் தெரியவரும்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்டுள்ள காதலர் சித்தார்த்த ரெட்டி பேசத் தொடங்கியதும் தான்பிரதியுக்ஷாவின் கற்பழிப்பின் மர்மம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil