twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடக் கொடுமையே.. விரட்டி மிரட்டும் கொரோனா.. பிரபல நடிகர், அவர் மனைவி, தம்பிக்கு தொற்று உறுதி..!

    By
    |

    மும்பை: பிரபல நடிகர், அவரது மனைவி மற்றும் சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இதன் தீவிரம் வேகமாக இருக்கிறது.

    இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது.

    ஷூட்டிங் ஸ்டார்ட்.. 4 மாதத்துக்கு பின் மேக்கப் போட்ட பிரபல ஹீரோ.. அற்புதமாக உணர்ந்ததாக நெகிழ்ச்சி! ஷூட்டிங் ஸ்டார்ட்.. 4 மாதத்துக்கு பின் மேக்கப் போட்ட பிரபல ஹீரோ.. அற்புதமாக உணர்ந்ததாக நெகிழ்ச்சி!

    விட்டு வைக்கவில்லை

    விட்டு வைக்கவில்லை

    இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இதன் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக மும்பை பெருநரகம் கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் அது விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அமிதாப்பச்சன்

    அமிதாப்பச்சன்

    பிரபல நடிகர் அமிதாப்பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோர் இந்த நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அமிதாப்பச்சனும் அபிஷேக் பச்சனும் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    நடிகர் பிரதிக் காந்தி

    நடிகர் பிரதிக் காந்தி

    இந்தநிலையில், மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் பிரதிக் காந்தி, அவரது மனைவியும் நடிகையுமான பாமினி ஓஷா, சகோதரர் புனித் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் பிரதிக் காந்தி தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ' கொரோனா பாகுபாடு இல்லாமல் எங்கள் குடும்பத்தில் அனைவரையும் பாதித்துள்ளது. நானும், எனது மனைவியும் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறோம்.

    வலிமையான போராட்டம்

    வலிமையான போராட்டம்

    எனது சகோதரர் புனித் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அரவணைப்புடன் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான வலிமையான போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் பிரதிக் காந்தி, இந்தியில் மிட்ரான், லவ்யாத்ரி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பே யார், ராங் சைட் ராஜூ, லவ் நி பவாய் உள்ளிட்ட குஜராத்தி படங்களிலும் நடித்துள்ளார்.

    English summary
    In a social media post Pratik Gandhi said while he and wife Bhamini Oza were quarantining at their home, his brother has been hospitalised.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X