»   »  திடீர் நெஞ்சுவலி காரணமாக..'மண்வாசனை' பிரதியுஷாவின் காதலன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி காரணமாக..'மண்வாசனை' பிரதியுஷாவின் காதலன் மருத்துவமனையில் அனுமதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை பிரதியுஷாவின் காதலனான ராகுல், திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மண்வாசனை மற்றும் பல்வேறு இந்தி சீரியல்களில் நடித்துப் புகழ்பெற்றவர் பிரதியுஷா.இவர் கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதல் தோல்வி காரணமாக பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டாரா? என மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரதியுஷா (24)

பிரதியுஷா (24)

பாலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவரான பிரதியுஷா, மும்பையில் உள்ள தன்னுடைய வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரதியுஷாவின் மரணம் பாலிவுட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் காதல் தோல்வி காரணமாக பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

பிரதியுஷாவின் பெற்றோர்

பிரதியுஷாவின் பெற்றோர்

மேலும் பிரதியுஷாவின் தாய், தந்தை இருவரும் தங்களது மகளின் தற்கொலை முயற்சிக்கு, அவரது காதலன்தான் காரணம் என்று போலீசில் குற்றம் சுமத்தினர். இதனால் பிரதியுஷாவின் காதலர் ராகுலிடம் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராகுலுக்கு நெஞ்சுவலி

ராகுலுக்கு நெஞ்சுவலி

ராகுலிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் போலீசார் சேர்த்தனர். தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ராகுலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போதுமான ஆதாரங்கள்

போதுமான ஆதாரங்கள்

பிரதியுஷாவின் தற்கொலைக்கு அவரது காதலர் தான் காரணம், என்பதற்கான எந்த ஒரு வலுவான ஆதாரமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காதலர்களான பிரதியுஷா-ராகுல் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டதால், பிரதியுஷா மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

ராகுல்தான் காரணம்

ராகுல்தான் காரணம்

ராகுல், பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஒரு உறுதியான ஆதாரமும் போலீஸுக்கு இதுவரை கிடைக்கவில்லை. மேலும் பிரதியுஷாவின் பெற்றோரும் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு, பின்னர் சேர்ந்து விடுவது வாடிக்கைதான் என்று கூறியுள்ளனர். ஆனால் தங்கள் மகளின் தற்கொலைக்கு ராகுல்தான் காரணம் என்று முதலில் கூறிய பிரதியுஷாவின் பெற்றோர், பின்னர் போலீஸ் விசாரிக்கும்போது ராகுலுக்கு எதிரான வலிமையான குற்றச்சாட்டுகள் எதையும் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

இந்த வழக்கில் அடுத்த கட்டமாக ராகுல், பிரதியுஷா இருவரின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் இருவரின் செல்போன்களைக் கைப்பற்றி அவற்றையும் சோதனை செய்துவருகின்றனர். இதுவரை எந்த ஒரு போதுமான ஆதாரங்களும் இந்த வழக்கில் கிடைக்கவில்லை என்பதால், ராகுல் மருத்துவமனையிலிருந்து வந்தவுடன் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு செய்துள்ளது.

English summary
Pratyusha Boyfriend Rahul Yesterday Admitted to the Hospital because of Sudden Chest Pain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil