மாணவர்களை வைத்து அரசியல் செய்கிறாரா விஜய்?.. இயக்குநர் பிரவீன் காந்தி சொல்றதை கேளுங்க!
சென்னை: நடிகர் விஜய் கடந்த ஜூலை 3ம் தேதி 2ம் கட்டமாக மாணவர்களுக்கு விருது வழங்கினார். நீட் தேர்வுக்கு எதிராக விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு நீட் பற்றிய அறிவு இல்லை என்கிற அளவுக்கு கடுமையான விமர்சனங்களும் குவிந்துள்ளன.
மேலும், திமுகவின் பி டீமாக விஜய் மாறிவிட்டார் என்றும் கோட் படம் வெளியாக வேண்டும் என்பதற்காக மாநில அரசை ஆதரித்து பேச ஆரம்பித்து விட்டார் விஜய் என்கிற விமர்சனங்களும் கிளம்பி உள்ளன.

அதுமட்டுமின்றி மாணவர்களை அரசியலுக்கு வரத் தூண்டுகிறார் விஜய் என்றும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை வைத்துக் கொண்டு அவர் அரசியல் செய்து வருகிறார் என்கிற அளவுக்கு விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் அப்படியெல்லாம் கிடையாது என்றும் விஜய் மாணவர்கள் மத்தியில் பேசியதன் நோக்கம் இதுதான் என விளக்கியுள்ளார்.
மாணவர்களுக்கு விருது: 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களை அழைத்து வந்து அவர்கள் விருது கொடுத்து கெளரவித்துள்ளார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். மாணவர்களுடனான சந்திப்பின் போது நடிகர் விஜய் மாணவர்களின் பெற்றோர்களுடன் நடந்துக் கொண்ட விதம், மாணவர்களுடன் விளையாடிய விதம் என அத்தனை பேரிடமும் சொந்தம் கொண்டாடிய காட்சிகள் இணையத்தில் தீயாக பரவியது மட்டுமின்றி பலரது தூக்கத்தையே கெடுத்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
பணத்தை வாரி இறைக்கும் விஜய்: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து 2026ம் ஆண்டு தேர்தல் தான் இலக்கு என அரசியலில் இறங்கியுள்ள விஜய் அதற்காக கோடிக் கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருவதாக கூறுகின்றனர். நடிகர் விஜய் தனது சொந்த பணத்தில் தான் மண்டப வாடகை முதல், சாப்பாடு, விருதுகளுக்கான பணம் என அனைத்தையும் செலவு செய்துள்ளார் என பிரவீன் காந்தி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்: விஜய் பேசும் போது, நம்ம நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லை என்றும் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் எந்த துறையை தேர்வு செய்தாலும் அந்த துறையில் சாதனை படைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சுக்களை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மாணவர்களை அரசியலுக்கு வரவேண்டும் என்கிறாரே விஜய் இப்படியெல்லாம் பேசலாமா? என கேள்வி எழுப்பி அவரை விமர்சித்து வருகின்றனர்.
பிரவீன் காந்தி விளக்கம்: மாணவர்கள் அரசியலையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை என்றும் அரசியலில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தினால் தான் நம்ம நாட்டிற்கு நல்ல தலைவர்கள் கிடைப்பாங்க என்று தான் விஜய் பேசினார். மாணவர்கள் தன்னுடைய கட்சியில் வந்து இணைய வேண்டும் என்றெல்லாம் அவர் பேசவில்லை என பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

மாநாடு: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி படம் வெளியாகும் என தெரிகிறது. அதன் பின்னர், பிரம்மாண்டமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கல்வி விருது விழாவை போல மாநாட்டையும் விஜய் நடத்துவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











