தனுஷின் குடும்பம்தான் சீரழித்ததாம்.. ஓவராக பேசிய பிரசாந்த் பட இயக்குநர்.. புது பஞ்சாயத்து
சென்னை: நடிகர் தனுஷ் இந்திய அளவில் ஃபேமஸான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தற்போது சேகர் கம்முல்லா இயக்கும் குபேரா படத்தில் நடித்துவரும் அவர்; கடைசியாக ராயன் படத்தில் நடித்தார். அந்தப் படத்தை அவரே இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் அவர் குடும்பம் பற்றி இயக்குநர் பிரவீன் காந்தி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. அதிலும் தனுஷின் உருவம் ரொம்பவே கிண்டல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காதல் கொண்டேன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தியதன் காரணமாக நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றார். காதல் கொண்டேன் படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இதுவரை 49 படங்களில் நடித்திருக்கிறார். பெரும்பாலான படங்கள் ஹிட் படங்களாகவும், தனுஷுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்த படங்களாகவும் அமைந்தன.

பிஸி தனுஷ்: தனுஷின் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.தனுஷ் அடுத்ததாக மாரி செல்வராஜுடன் ஒரு படம், சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படம் ஆகியவற்றில் கமிட்டாகியிருக்கிறார். இதனால் அவர் படு பிஸியாக இருக்கிறார். முக்கியமாக முதல் படத்தில் பல கிண்டலுக்கு ஆளான தனுஷ்; தன்னை கிண்டல் செய்தவர்களையே பாராட்ட வைத்ததன் மூலம் உண்மையான வெற்றி என்றால் என்னவென்று நிரூபித்திருக்கிறார்.
ராயன்: இதற்கிடையே அவர் தனது 50ஆவது படமாக ராயன் படத்தை இயக்கி நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு வெளியான அந்தப் படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. அதேசமயம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் தான் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை என தனுஷ் கொஞ்சம் அப்செட்டாகியிருப்பதாகவும் கோலிவுட்டில் பேச்சு எழுந்திருக்கிறது.
சர்ச்சை: அதேபோல் தனுஷ் மீது சமீபகாலமாகவே பலர் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்களை வைத்துவருகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் தனுஷ் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை.மாறாக தன்னுடைய வேலை என்னவோ அதை பற்றி மட்டுமே கவனம் செலுத்திவருகிறார். இப்படிப்பட்ட சூழலில் அவர் குறித்து ஜோடி, ரட்சகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரவீன் காந்தி பேசியிருக்கும் விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரவீன் காந்தி பேட்டி: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "வயசு பசங்களை சீரழித்ததே தனுஷ் குடும்பம்தான். துள்ளுவதோ இளமை படத்தில் சினிமாவை கசகசவென்று ஆக்கிவிட்டார்கள். அப்பனை திட்டுவது, அப்பன் முன் தண்ணி அடிப்பது, அப்பன் முன் மகன் தப்பு செய்வது என கலாசார சீரழிவை சினிமாவில் முதலில் கொண்டு வந்ததே தனுஷின் குடும்பம்தான்" என்று கூறியிருக்கிறார். இதனை பார்த்த தனுஷ் ரசிகர்கள்; என்ன இவர் ஓவரா பேசுறாரு.. இவரோட படங்களில் ஒரு காட்சிகூடவா கெட்டதாக இல்லை என சரமாரியாக பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











