பாஜக சார்பில் போட்டியிடுகிறேனா? எனக்கு அரசியல்னா என்னன்னே தெரியாதே.. பிரபல நடிகை பளிச்!
கொச்சி: அரசியல் என்றால் என்னவென்று தெரியாது என பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சிகள் பரபரப்பாகி இருக்கின்றன. நடிகர், நடிகைகள் சிலர், அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர்.
பாஜக உள்ளிட்ட தேசிய கட்சிகள் நடிகர், நடிகைகளை தங்கள் கட்சிக்கு இழுக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

குணசித்திர வேடம்
இந்நிலையில், பிரபல நடிகை பிரவீணா, பாஜகவில் சேர இருப்பதாகவும் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிட இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இதை மறுத்துள்ளார் பிரவீணா. மலையாள நடிகையான இவர், அங்கு அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

சினிமா பிரபலங்கள்
தமிழில், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, சசிகுமார் நடித்த வெற்றிவேல், விக்ரமின் சாமி 2, கோமாளி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து நடித்து வருகிறது. இவர் உட்பட சில சினிமா பிரபலங்கள் பாஜகவில் சேர இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின

தவறான தகவல்
அதோடு, நடைபெற இருக்கும் தேர்தலில், கொல்லம் அல்லது திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகை பிரவீணா போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதை மறுத்துள்ள நடிகை பிரவீணா, இது தவறான தகவல் என்று கூறியுள்ளார்.

அரசியலில் இல்லை
அவர் மேலும் கூறும்போது, 'எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியல் கட்சியில் சேரும் எண்ணமும் எனக்கு இல்லை. இப்படி ஒரு தகவல் மூலம் என்னை அரசியலுக்குள் இழுத்துவிட்ட முகம் தெரியாத நபருக்கு நன்றி. நான் அரசியலில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











