வீட்டுக்கு வந்த விருந்தாளியாம்ல! நல்லபாம்பு குட்டியை கையில் ஏந்திய பிரபல நடிகை..வைரலாகும் வீடியோ!

By

திருவனந்தபுரம்: நல்லபாம்பு குட்டியை கையில் ஏந்தியபடி, பிரபல நடிகை வெளியிட்டுள்ள

Recommended Video

Praveena Bold gesture | Baby Cobra | Priyamanaval Serial | Magarasi

வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பிரவீணா.

மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

கோழிக்கூட்டில்

கோழிக்கூட்டில்

தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இது தவிர மலையாளத்தில், சில நடிகைகளுக்கு டப்பிங்கும் கொடுத்து வருகிறார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டு கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது.

நல்லபாம்பு குட்டி

நல்லபாம்பு குட்டி

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்தார். அங்குள்ள ஊழியர்கள் விரைந்து வந்து கோழி கூட்டிலும் அதன் சுற்றுப்புறங்களில் பாம்பைத் தேடினர். ஆனால், அது கிடைக்கவில்லை. வேறு எங்கோ சென்றுவிட்டது. ஆனால், கோழி கூட்டுக்குள் பிறந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டிப் பதுங்கி இருந்தது.

பயப்பட வேண்டாம்

பயப்பட வேண்டாம்

இதைப் பாம்பு பண்ணை ஊழியர்கள் பிடித்தனர். குட்டியாக இருந்தாலும் அது படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதனால் பிரவீணா உட்பட அவர் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஊழியர்கள், பாம்பை கண்டு பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர். பின்னர் அந்த குட்டிப் பாம்பை, பிரவீணா கையில் கொடுத்தனர்.

மாற வேண்டும்

மாற வேண்டும்

அதை இரண்டு கைகளிலும் பெற்றுக்கொண்ட பிரவீணா, வைத்துக்கொண்டார். அந்தப் பாம்பு கையில் இருந்தபடி ஸ்டைலாக படமெடுத்து போஸ் கொடுத்தது. இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார், பிரவீணா. இது வைரலாகி வருகிறது. இதுபற்றி பிரவீணா கூறும்போது, 'பாம்பைக் கண்டால் கொல்ல வேண்டும் என்கிற அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.

More from Filmibeat

Read more about: cobra பிரவீணா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X