twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தங்கர்பச்சான் காலில் விழுந்த நடிகர்! தங்கர்பச்சான் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடியாது போலிருக்கிறது. தங்கரை, நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க செய்ததை இயக்குநர்கள் இன்னும் மனதிற்குள்ளேயே வைத்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுசென்னையில் சமீபத்தில் நடந்த துள்ளல் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவின்போது பார்க்க முடிந்தது.துள்ளல் பட இயக்குநர், தயாரிப்பாளர் பிரவீண் காந்த் (ரட்சகன் படத்தை இயக்கியவர்), தனது துள்ளல் பட அனுபவம் குறித்துநிழல்களின் காலடியில் நிஜங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதன் வெளியீடும், பாடல் கேசட் வெளியீடும்சென்னையில் நடந்தது. இயக்குநர்கள் தங்கர்பச்சான், சேரன், சீமான், மனோஜ் குமார், பாலசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகஅழைக்கப்பட்டிருந்தனர். நடிகர், நடிகையர் யாரும் இதில் அழைக்கப்படவில்லை.நடிகர் சங்க சம்பவத்திற்குப் பிறகு தங்கர்பச்சான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் பத்திரிக்கையாளர்களும் ஏகப்பட்டபேர் குவிந்திருந்தனர். பிரவீண் காந்த் வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில், தங்கர்பச்சான் முதலில் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்றுதான் கூறியிருந்தார். நான்தான் வற்புறுத்தி வரச் செய்தேன். நடிகர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் அவமானம்அவரிடமிருந்து இன்னும் விலகவில்லை. அவமானப்பட்ட உணர்வுடன்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார் என்றார். அப்போது குறுக்கிட்ட தங்கர், அதுகுறித்துப் பேச வேண்டாம் என்று பிரவீண் காந்த்திடம் கூறினார். பின்னர் சேரன் பேசுகையில்,நானோ, தங்கரோ, எஸ்.ஜே. சூர்யாவோ, பிரவீண் காந்த்தோ நடிகனாக வேண்டும் என்று நினைத்து படங்களில் நடிக்கவில்லை.நாங்கள் கேட்ட நடிகர்கள் அந்தக் கதைகளில் நடிக்க மறுத்ததால்தான் நாங்களே நடிக்க வேண்டியதாயிற்று. துள்ளல் படத்தில்பிரவீண்காந்த் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்றார்.அனைவரும் பேசி முடித்த பின்னர் பிரவீண்காந்த் நன்றி கூற வந்தார். அப்போது, நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அது சரியா,தவறா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அதைச் செய்ய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு நடிகராக (மீண்டும்கூறினார்), ஒரு நடிகராக இதைச் செய்கிறேன் என்று கூறி விட்டு நேராக தங்கரிடம் சென்று அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.இதை எதிர்பார்க்காத தங்கர்பச்சான், பிரவீண்காந்த்தை தடுக்க முயன்றும் முடியவில்லை. இந்தக் காட்சியைப் பார்த்து அரங்கமேநிசப்தமானது.தங்கர்பச்சான் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடியாது போலிருக்கு!

    By Staff
    |

    தங்கர்பச்சான் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடியாது போலிருக்கிறது. தங்கரை, நடிகர் சங்கத்திற்கு வரவழைத்து காலில் விழவைத்து மன்னிப்பு கேட்க செய்ததை இயக்குநர்கள் இன்னும் மனதிற்குள்ளேயே வைத்து குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுசென்னையில் சமீபத்தில் நடந்த துள்ளல் பட ஆடியோ கேசட் வெளியீட்டு விழாவின்போது பார்க்க முடிந்தது.

    துள்ளல் பட இயக்குநர், தயாரிப்பாளர் பிரவீண் காந்த் (ரட்சகன் படத்தை இயக்கியவர்), தனது துள்ளல் பட அனுபவம் குறித்துநிழல்களின் காலடியில் நிஜங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதன் வெளியீடும், பாடல் கேசட் வெளியீடும்சென்னையில் நடந்தது.


    இயக்குநர்கள் தங்கர்பச்சான், சேரன், சீமான், மனோஜ் குமார், பாலசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகஅழைக்கப்பட்டிருந்தனர். நடிகர், நடிகையர் யாரும் இதில் அழைக்கப்படவில்லை.

    நடிகர் சங்க சம்பவத்திற்குப் பிறகு தங்கர்பச்சான் கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால் பத்திரிக்கையாளர்களும் ஏகப்பட்டபேர் குவிந்திருந்தனர். பிரவீண் காந்த் வரவேற்புரையாற்றினார். அவர் பேசுகையில், தங்கர்பச்சான் முதலில் இந்த விழாவுக்கு வரமாட்டேன் என்றுதான் கூறியிருந்தார். நான்தான் வற்புறுத்தி வரச் செய்தேன். நடிகர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியின் அவமானம்அவரிடமிருந்து இன்னும் விலகவில்லை. அவமானப்பட்ட உணர்வுடன்தான் அவர் இங்கே அமர்ந்திருக்கிறார் என்றார்.


    அப்போது குறுக்கிட்ட தங்கர், அதுகுறித்துப் பேச வேண்டாம் என்று பிரவீண் காந்த்திடம் கூறினார். பின்னர் சேரன் பேசுகையில்,நானோ, தங்கரோ, எஸ்.ஜே. சூர்யாவோ, பிரவீண் காந்த்தோ நடிகனாக வேண்டும் என்று நினைத்து படங்களில் நடிக்கவில்லை.நாங்கள் கேட்ட நடிகர்கள் அந்தக் கதைகளில் நடிக்க மறுத்ததால்தான் நாங்களே நடிக்க வேண்டியதாயிற்று. துள்ளல் படத்தில்பிரவீண்காந்த் மிகப் பிரமாதமாக நடித்திருக்கிறார் என்றார்.

    அனைவரும் பேசி முடித்த பின்னர் பிரவீண்காந்த் நன்றி கூற வந்தார். அப்போது, நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன். அது சரியா,தவறா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும் அதைச் செய்ய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். ஒரு நடிகராக (மீண்டும்கூறினார்), ஒரு நடிகராக இதைச் செய்கிறேன் என்று கூறி விட்டு நேராக தங்கரிடம் சென்று அவரது காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார்.

    இதை எதிர்பார்க்காத தங்கர்பச்சான், பிரவீண்காந்த்தை தடுக்க முயன்றும் முடியவில்லை. இந்தக் காட்சியைப் பார்த்து அரங்கமேநிசப்தமானது.

    தங்கர்பச்சான் விவகாரம் அவ்வளவு சீக்கிரம் முடியாது போலிருக்கு!

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X