யாரு பார்த்த வேலைடா இது.. சமுத்திரக்கனியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்!

சென்னை: டிவிட்டரில் திடீரென #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அதாவது நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற நாளில் உலகளவில் ட்ரென்ட்டானவர் நேசமணி. சுத்தியல் இமேஜை போட்டு இதன் பெயர் என்ன என ஒரு நெட்டிசன் கேட்க அதற்கு விளக்கம் கொடுத்தார் மற்றொரு நெட்டிசன்.

அப்போது பிரன்ட்ஸ் படத்தில் சுத்தியலைக் கொண்டு ஆணிகளை பிடுங்கிய போது கீழே நின்றுக்கொண்டிருந்த பெயின்டர் நேசமணி தலையில் மேலே இருந்து சுத்தியல் விழுந்தது என்று எடுத்துக்காட்டாக கூறினார்.

நேசமணி ஹேஷ்டேக்

நேசமணி ஹேஷ்டேக்

இதனைக் உண்மை என்று நம்பிய அந்த வெளிநாட்டு நெட்டிசன் #PrayforNesamani என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டார். இப்படியாக உலகளவில் ட்ரென்ட்டானது அந்த ஹேஷ்டேக். இந்நிலையில் இன்று #Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது.

தரமான இயக்குநர்

தரமான இயக்குநர்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. சமூக நலன் சார்ந்த படங்களை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சமுத்திரக்கனி. தொடர்ந்து நிறைஞ்ச மனசு, நாடோடிகள் உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியிருக்கிறார்.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மொழி படங்களையும் இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி. இயக்குநராக மட்டுமின்றி சிறந்த நடிகராகவும் வலம் வருகிறார் சமுத்திரக்கனி. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே அவரை கிண்டலடித்தும் கேலி செய்தும் மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது.

டிவிட்டர் ட்ரென்டிங்

இந்நிலையில் Pray_For_samuthirakani என்ற ஹேஷ்டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. அதோடு மிகவும் தரக்குறைவாகவும் சமுத்திரக்கனி தொடர்பான மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். வித்தியாசம் வித்தியாசமாக சமுத்திர கோணி, சமுத்திரராஜா, சமுத்திர ஆணி, சமுத்திரக்கனியை வைத்து மீம்ஸ்களை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

காரணமே இல்லாமல்

எதுக்கு ட்ரென்ட் ஆக்குறாங்கன்னே தெரிய மாட்டேங்குது என்றும் காரணமே இல்லாம ட்ரென்ட் பண்றாங்களே.. எதுக்குடா நான் ட்ரென்ட்டா ஆனேன் சொல்லுங்கடா என சமுத்திரக்கனி புலம்புவதும் போன்றும் வடிவேலுவின் படத்தை வைத்து இந்த மீமை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

எல்லை மீறி போறிங்கடா

மேலும் வாணி ராணி சீரியலை வைத்தும் சமுத்திரக்கனியை வச்சு செய்துள்ளனர். ராதிகாவின் முகத்தில் சமுத்திரக்கனியின் படத்தை பதிவிட்டு சமுத்திர வாணி சமுத்திர ராணி என எடிட் செய்து வைரலாக்கியுள்ளனர். இதனை பார்த்து சமுத்திரக்கனி டேய் எல்லை மீறி போறிங்க டா என கூறுவதாகவும் மீம் கிரியேட் செய்துள்ளனர்.

சமுத்திர ட்ரம்ப்

சமுத்திரக்கன்னி என்றும்.. எதுக்கு ட்ரென்ட் பண்றோம்னு கூட தெரியாத அப்பாவிங்க இவரு என்றும்.. கடல் கன்னி போன்று சமுத்திரக்கனியை எடிட் செய்து நாசம் செய்துள்ளனர். இதேபோல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டோவில் சமுத்திரக்கனியின் முகத்தை பதிவிட்டு சமுத்திர ட்ரம்ப் என பதிவிட்டுள்ளனர். இதேபோல் 96 படத்தில் இடம்பெற்ற திரிஷாவின் படத்தை சமுத்திரக்கனியாக்கி மரணக் கலாய் கலாய்த்துள்ளனர்.

பிஞ்சு, காய், கனி

சமுத்திரக்கனியின் இளவயது முதலான போட்டோக்களை மூன்றாக பிரித்து சமுத்திர பிஞ்சு, சமுத்திரக்கனி, சமுத்திரக்காய் என கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
எதுக்குடா இப்போ சமுத்திரகனி புடிச்சு இப்படி ஓட்றீங்க???
சிரிச்சே செத்துட்டேன்... நீங்களாச்சும் சமுத்திரகனி ட்ரெண்டிங்க்கான காரணத்தை சொல்லுங்கப்பா??என்று கேட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பேய்டு ட்ரோல்ஸ்?

சமுத்திரக்கனி எதற்காக இப்படி ட்ரோல் செய்யப்படுகிறார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக அவர் பேசியதாகவும், குவாரண்டைன் டைம் பாஸ் என்றும் சமுத்திரக்கனியை கலாய்ப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சிலர் பணம் கொடுத்து அவரை இதுபோன்ற இழிவுபடுத்த கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X