அப்பா- மகள் மாதிரி இருக்கே.. சீனியர் ஹீரோ படத்தில் இருந்து பிரபல ஹீரோயின் திடீர் நீக்கம்!

By

சென்னை: சீனியர் ஹீரோ ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட, நடிகை வயது வித்தியாசம் பளிச்சென தெரிந்ததால், நீக்கப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிரயாகா மார்டின். பின்னர் ஹீரோயின் ஆனார்.

அங்கிருந்து தமிழுக்கு அழைத்து வந்தார் பிரபல இயக்குனர் மிஷ்கின். தனது பிசாசு படத்தில் நடிக்க வைத்தார்.

வாய்ப்பு வரும்

வாய்ப்பு வரும்

நாகா, ராதாரவி நடித்த இந்தப் படத்தில் அவர் பேயாகவே நடித்ததால், அவர் அழகு முகத்தை தமிழ் சினிமா அதிகம் பார்க்கவில்லை. இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் வரும் என்று காத்திருந்தார். வரவில்லை. பிறகு மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

திலீப்பின் ராம்லீலா

திலீப்பின் ராம்லீலா

முரளி கோபியுடன் பா வா, தியான் ஶ்ரீனிவாசனுடன் ஒரே முகம், ரோஷன் மாத்யூவுடன் விஸ்வாசபூர்வம் மன்சூர், திலீப்பின் ராம்லீலா உட்பட சில படங்களில் நடித்தார். பின்னர் தமிழில் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆர். கண்ணன் இயக்க இருந்த 'போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தில் நடிக்க இருந்தார்.

களத்தில் சந்திப்போம்

களத்தில் சந்திப்போம்

அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வெறுத்துப் போன அவர் மலையாளத்தில் கவனம் செலுத்தினார். கன்னடப் படம் ஒன்றிலும் நடித்தார். இருந்தாலும் பெரிய பிரேக் கிடைக்கவில்லை. இப்போது தமிழில் ஜீவா, அருள்நிதி நடிக்கும் களத்தில் சந்திப்போம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

 சீனியர் ஜோடியாக

சீனியர் ஜோடியாக

இதையடுத்து அவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு கிடைத்தது. பிரபல தெலுங்கு சீனியர் ஹீரோ பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க பல முன்னணி நடிகைகள் மறுத்த நிலையில் பிரக்யாவும் பூர்ணாவும் ஒப்பந்தமானார்கள். போயபதி ஶ்ரீனு இயக்கும் இந்தப் படத்தில் டெஸ்ட் ஷூட் சமீபத்தில் நடந்தது.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

இதில் பாலகிருஷ்ணாவும் பிரக்யா மார்டினும் பங்கேற்றனர். ஷூட்டிங் முடிந்து பார்த்தபோது இருவருக்குமான பொருத்தம் சரியில்லை என்பது தெரிய வந்தது. வயது வித்தியாசம் பளிச்சென தெரிந்ததால், பிரக்யாவை மாற்றிவிட்டனர். இந்தப் படம் மூலம் தெலுங்கில் என்ட்ரி கொடுக்கலாம் என்றிருந்த அவருக்கு இது ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.

பிரக்யா ஜெய்ஸ்வால்

பிரக்யா ஜெய்ஸ்வால்

இதையடுத்து பிரக்யா ஜெய்ஸ்வாலை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர், தமிழில், விரட்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள சில படங்கள் தமிழ், மலையாள மொழிகளில் டப் ஆகியுள்ளன. இந்தியிலும் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X