»   »  ப்ரீத்திக்கு குடும்பம் முழுக்கு!: படத்துக்கு மாலை-விளக்கு!!

ப்ரீத்திக்கு குடும்பம் முழுக்கு!: படத்துக்கு மாலை-விளக்கு!!

Subscribe to Oneindia Tamil

தனது தாயாரே தன்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள நடிகை ப்ரீத்தி வர்மாவை அவரது குடும்பம் தலைமுழுகியுள்ளது.ப்ரீத்தி படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றியுள்ள அவரது குடும்பத்தினர் ப்ரீத்தி செத்துப் போய்விட்டதாக கருதுவதாக கூறியுள்ளனர்.

விந்தியாவின் மேனேஜர் கம் முன்னாள் காதலன் அருணுடன் ஓடிப் போன ப்ரீத்தி இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அருணைமும்பையில் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்ட ப்ரீத்தி தனது காதலன் விஜய்யுடன் எங்கேயோ போய்விட்டதாகக் கருதப்படுகிறது.

இந் நிலையில் பணத்துக்காக தன்னை பணக்காரர்களுக்கு தனது தாய் ரம்யாவே தாரை வார்த்ததாகக் கூறியும், என்னைத் தேட வேண்டாம், நான்என் வாழ்க்கையை பார்த்துக் கொள்வேன் என்று சொல்லியும் ஒரு கடிதத்தை போலீசுக்கு அனுப்பியுள்ளார்.

இந் நிலையில் ப்ரீத்தியின் தந்தை பரத்குமார் கூறுகையில்,

ப்ரீத்தி எங்களை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் கேவலப்படுத்திவிட்டாள். இனி அவள் எங்களுக்கு தேவையே இல்லை.எங்களை பொறுத்தவரை அவள் செத்துப் போய்விட்டாள்.

அவள் படத்துக்கு மாலை போட்டு, விளக்கேற்றி விட்டோம். இனி அவள் எந்த சூழலில் திரும்பி வந்தாலும் ஏற்க மாட்டோம். எங்கள் உறவினர்கள்வீட்டுக்குள்ளும் அவள் எங்கள் பெயரை சொல்லிக் கொண்டு போகக் கூடாது.

ப்ரீத்தி சொல்வது போல அவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்திருந்தால் இப்படி வாடகை வீட்டில் இருக்க மாட்டோம். பெற்றமகளை பிறருடன் படுக்கச் சொல்லி பணம் சம்பாதிக்கும் ஆட்கள் அல்ல நாங்கள்.

போகும்போது ரூ. 1 லட்சம் பணம், லேப்டாப், டிஜிட்டல் கம்ப்யூட்டரை எடுத்துக் கொண்டு போய்விட்டாள். அவையெல்லாம் அவள்சம்பாதித்தவை தான். அவளது டிரஸ் எல்லாம் தனியாக எடுத்து வைத்துவிட்டோம்.

எங்களிடம் வந்தோ அல்லது போலீசில் போயோ உங்களிடம் வாழ விரும்பவில்லை என்று சொல்லட்டும். அவளுக்கு சொந்தமான மிச்சப்பொருட்களையும் ஒப்படைத்துவிடுகிறோம். அவளது பெயரில் உள்ள நிலத்தையும் அவளே வைத்துக் கொள்ளட்டும்.

ப்ரீத்தி ஓடிப் போனதில் இருந்து வெளியில் தலைகாட்டம முடியவில்லை. தெலுங்கு படத் தயாரிப்பாளர்கள் போன் செய்து மிரட்டுகிறார்கள்.மகளை மரியாதையாக வந்து நடிக்கச் சொல் என்று மிரட்டுகிறார்கள்.

அவள் வேறு எங்கும் ஓடவில்லை. சென்னையில் தான் இருக்கிறாள். செளகார்பேட்டையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் அடிக்கடி வீட்டுக்குவருவார். 25 வயதான அவர் ப்ரீத்திக்கு ராக்கி எல்லாம் கட்டினான். ஆனால், இப்போது அவனுடன் தான் ஓடிப் போய் இருக்கிறான். அவன்பிடியில் தான் ப்ரீத்தி இருக்கிறாள் என்றாள்.

தாயார் ரம்யா கூறுகையில், இப்படி எங்களை அசிங்கப்படுத்துவாள் என கனவிலும் நினைக்கவில்லை. யாருடனாவது போய் படுத்து பணம்சம்பாதித்து வா என்று சொல்லியிருந்தால் என்னை நல்லவள் என்று சொல்லியிருப்பாளோ என்னவோ என்றார்.

இந் நிலையில் பரத், ரம்யாவிடம் போலீசார் இன்று விசாரணை நடத்தினர். அப்போது மார்வாடி மகேந்திரன் குறித்த தகவல்களை அவர்கள்தெரிவித்தனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil