»   »  ப்ரீத்தி மீது வழக்கு: தெலுங்கு தயாரிப்பாளர்

ப்ரீத்தி மீது வழக்கு: தெலுங்கு தயாரிப்பாளர்

Subscribe to Oneindia Tamil

ப்ரீத்தி வர்மா உடனடியாக வெளிவந்து எனது படத்தை நடித்து முடித்துக் கொடுக்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்று தெலுங்குப்படத் தயாரிப்பாளரும், நடிகருமான ரங்கா பாபு கூறியுள்ளார்.

காதலருடன் ஓடிப் போய் விட்ட ப்ரீத்தி வர்மா தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவர் சென்னையில்தான் காதலருடன் தலைமறைவாகஇருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ப்ரீத்தி வர்மாவை வைத்து எடுக்கப்பட்டு வந்த ராமுடு மஞ்சிபாலுடு என்ற படம் பாதியில் நிற்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரும்,ஹீரோவுமான ரங்காபாபு சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் (புலம்புகையில்!) உபேந்திரா மூவிஸ் நிறுவனம் சார்பில் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி செலவில் ராமுடு மஞ்சிபாலுடுஎன்ற படத்தைத் தயாரித்து வருகிறேன்.

இதில் ப்ரீத்தி வர்மாதான் ஹீரோயின். எனக்கும், சுமனுக்கும் அவர் ஜோடி போட்டு இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு அட்வான்ஸ்பணமாக ரூ. 25 ஆயிரம் கொடுத்தோம். ஜனவரி 9ம் தேதியிலிருந்து மார்ச் 10ம் தேதி வரை நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார்.

படப்பிடிப்பு தொடங்கி, பாடல்கள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. வசனக் காட்சிகளும் பாதியளவு முடிந்து விட்டது. இந்த நிலையில்ராஜமுந்திரியில் கடந்த மாதம் 11ம் தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது திடீரென ப்ரீத்தி வர்மா காணாமல் போய் விட்டார்.

அவர் போனதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டு பாதியில் நிற்கிறது. இப்படத்துக்காக இதுவரை 60 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளோம். அவர்காணாமல் போனது குறித்து போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்திலும் புகார் கொடுத்துள்ளோம்.

ப்ரீத்தி வர்மா உடனடியாக திரும்பி வந்து நடித்துத் தர வேண்டும். அவருக்கு போதிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவர் வராவிட்டால்வழக்கு தொடருவதைத் தவிர வேறு வழியில்லை என்றார் பாபு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil