முன்ஜாமீன் கோரும் ப்ரீத்தி வர்மா அப்பா, அம்மா
நடிகை ப்ரீத்தி வர்மாவின் அம்மாவும், அப்பாவும் முன்ஜாமீன் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தன்னை தனது அப்பா பரத்குமாரும், தாயார் ரம்யாவும் சேர்ந்து விபச்சாரத்தில் தள்ள முயன்றதாக ப்ரீத்தி வர்மா சமீபத்தில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி பூதநாதன் உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து பரத்குமார், ரம்யா மீது கே.கே.நகர் போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கைது செய்யவும் திட்டமிட்டனர். இதையடுத்து பரத்குமாரும், ரம்யாவும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் இருவரும் முன்ஜாமீன் கோரி இருவரின் சார்பிலும் சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள் வேலைநிறுத்தம் செய்வதாக நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 4ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தார் நீதிபதி.
இதற்கிடையே, ப்ரீத்தி வர்மா வழக்கில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர் நடித்த படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்குத் தொடர்பானவர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











