கீர்த்தி சுரேஷை அந்த விஷயத்துக்காக திட்டிய விஜய் நண்பர்.. மறுபக்கத்தை ஓபன் பண்ண ப்ரீத்தி சஞ்சீவ்!
சென்னை: தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் வீட்டின் அருகே கீர்த்தி சுரேஷ் வசித்து வரும் நிலையில், கீர்த்தி சுரேஷுக்கும் சஞ்சீவுக்கும் இடையேயான உறவு மற்றும் ப்ரீத்தி சஞ்சீவ் இடையேயான உறவு குறித்து சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் நடைபெற்ற ரசிகர்கள் மீட் நிகழ்வில் ப்ரீத்தி சஞ்சீவ் மற்றும் கீர்த்தி சுரேஷ் வெளிப்படையாக பேசியது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றிய ஏகப்பட்ட கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வருகின்றன. நடிகர் விஜய்யின் ரசிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவருடன் இணைந்து பைரவா மற்றும் சர்க்கார் உள்ளிட்ட 2 படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சஞ்சீவை சார் என்று தான் கீர்த்தி சுரேஷ் அழைப்பார் என்றும் தன்னுடைய தங்கை மாதிரி தான் இத்தனை ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் பழகி வருகிறார் என ப்ரீத்தி சஞ்சீவ் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷுடன் பழக்கம் எப்படி?: சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி சஞ்சீவ் உடன் கீர்த்தி சுரேஷுக்கு எப்படி பழக்கம் ஏற்பட்டது என்பதே பெரிய கேள்வியாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், அதை உடைக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் நிகழ்ச்சியில் ப்ரீத்தி சஞ்சீவ் வந்து பேசியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தின் போது, சமைக்க தெரியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கீர்த்தி சுரேஷுக்கு சாப்பாடு சமைத்துக் கொடுத்து உதவியதில் இருந்தே ப்ரீத்தி சஞ்சீவின் உணவுக்கு கீர்த்தி சுரேஷ் அடிமையாகி அப்படியே நட்பாக பழகி வருவதாக கூறியுள்ளார்.

திட்டிய சஞ்சீவ்: பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு கிடைத்த போது தனது உடல் எடையை குறைப்பதற்காக முயற்சித்த கீர்த்தி சுரேஷ் ஓவராக ஒல்லியாகி விட்டார். அதை பார்த்த சஞ்சீவ் ஏன் இப்படியெல்லாம் பண்ற எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுக்குற என திட்டியதாக ப்ரீத்தி சஞ்சீவ் கூறினார். சமீபத்தில், சார் என்னை பார்த்த போது, இப்போ தான் பார்க்க நல்லா ஃபிட்டா இருக்க இதையே மெயின்டெயின் பண்ணுன்னு சொன்னார் என கீர்த்தி சுரேஷும் அதுகுறித்து பேசியுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் மறுபக்கம்: கீர்த்தி சுரேஷ் செம ஜாலியான பர்சன் தனது மகள் லயாவுக்கு அவர் தான் கோலம் வரையவும், வயலின் வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார். பெரிய ஸ்டார் மாதிரி எல்லாம் பழக மாட்டார். இப்பவும் அவருடைய படங்களை பார்த்து விட்டு நிறை, குறைகளை எல்லாம் சொன்னால் கூட அப்படியே கேட்டுக் கொண்டு மாற்றிக் கொள்வார். என் கூட பிறக்காத தங்கச்சி தான் கீர்த்தி சுரேஷ் என ப்ரீத்தி சஞ்சீவ் நடிகை கீர்த்தி சுரேஷின் இன்னொரு பக்கம் பற்றி கூறியுள்ளார்.

ஒரே முடிவு: எந்தளவுக்கு ஜாலியாக இருக்கிறாரோ அதே அளவுக்கு ஒரு விஷயத்தில் சரியான முடிவை எடுப்பதில் கெட்டிக்காரி. மேலும், ஒரு முடிவை எடுத்து விட்டால் அதில், நிலையாகவும் வலுவாகவும் இருப்பதை எல்லாம் பார்த்து எனக்கு ரொம்பவே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கீர்த்தியின் வளர்ச்சிக்கே காரணம் என நினைக்கிறேன் என்றார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரகு தாத்தா திரைப்படம் இந்த வாரம் சுதந்திர தினத்தன்று வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











