பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்ப பரிசோதனை.. பிக் பாஸ் போட்டியாளர் வெளியிட்ட ஷாக் தகவல்

பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்துவது தெரிய வந்துள்ளது.

சென்னை: பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுக்கு கர்ப்பப் பரிசோதனை நடத்தப்படுவதாக முன்னாள் போட்டியாளர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்குப் பேர் போனதுதான். நாம் வெளியில் இருந்து பார்ப்பதைவிட, அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கூறும் தகவல்கள் ஆச்சர்யமாகவும், சமயத்தில் அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்து விடுவது உண்டு.

அந்தவகையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார், பிக் பாஸ் வீட்டில் இரவில் விளக்குகள் அணைக்கப்படுவதில்லை என்ற மிகப் பெரிய உண்மையைக் கூறி இருந்தார். விளக்குகள் அணைப்பது போல் காட்டிவிட்டு, பிறகு அனைத்து விளக்குகளையும் போட்டு விடுவார்கள். விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டியாளர்கள் உறங்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

வனிதாவின் பேட்டி:

வனிதாவின் பேட்டி:

வனிதாவின் இந்தப் பேட்டியால், ‘பகலிலும் தூங்கக்கூடாது. இரவிலும் இப்படி விளக்கைப் போட்டு சித்ரவதை செய்யலாமா' என பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக மக்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள நடிகை ஹேமா கூறியுள்ள தகவல் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

கர்ப்ப பரிசோதனை:

கர்ப்ப பரிசோதனை:

அதாவது, ‘பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பெண் போட்டியாளர்களுக்கு, அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என்ற சோதனை நடத்தப்படுகிறது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் அவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டு, கருக்கலைப்பு ஏற்பட்டு விடாமல் இருக்கத் தான் இந்த சோதனை. கர்ப்பமாக இருப்பவர்களுக்கு உள்ளே அனுமதி இல்லை' என ஹேமா தெரிவித்துள்ளார்.

மூத்த நடிகை ஹேமா:

மூத்த நடிகை ஹேமா:

தெலுங்கில் மூத்த நடிகையான ஹேமா, திரைத்துறையில் சுமார் 30 வருட அனுபவம் உள்ளவர். ஆனால், பிக் பாஸ் வீட்டில் நிஜமாகவே நடிகர்கள் நடிப்பதைப் பார்த்தால், தனது 30 வருட அனுபவம் எல்லாம் ஒன்றுமே இல்லை என ஆச்சர்யம் தெரிவித்துள்ளார் ஹேமா. பிக் பாஸ் போட்டியாளர்கள் வெளியிடும் இத்தகைய தகவல்களால் பிக் பாஸ் வீட்டில் இன்னும் என்னென்ன மோசமான விசயங்கள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மமதி பேட்டி:

மமதி பேட்டி:

ஏனென்றால் கடந்த சீசன் போட்டியாளரான மமதி, சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், ‘பிக் பாஸ் வீட்டில் நடப்பதை அப்படியே ஒளிபரப்பினால், அது நீலப்படம் ஆகிவிடும். யாரும் குடும்பமாக அமர்ந்து நிகழ்ச்சியைப் பார்க்க முடியாது. அந்தளவிற்கு அங்கு அத்துமீறுகிறார்கள்' என ஆதங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X