நீங்க இப்போ எமி மட்டுமல்ல ‘மம்மி’யும் கூட... பார்த்து நடந்துக்கோங்க!
பாஃப்டா விழாவில் கலந்து கொண்டார் கர்ப்பிணியான நடிகை எமி ஜாக்சன்.
Recommended Video
சென்னை: பாஃப்டா விருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடை அணிந்து வந்து போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் எமி ஜாக்சன்.
தமிழில் மதராஸப்பட்டிணம், ஐ, தெறி, 2.0 என விரல் விட்டு எண்ணும் அளவுக்கே படங்கள் நடித்திருந்தாலும், அனைத்திலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் எமி ஜாக்சன்.

கோடீஸ்வரர் ஜியார்ஜை காதலித்து வரும் எமி, தற்போது லண்டனில் வசித்து வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், எமி கர்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். குழந்தை பிறந்த பிறகே இவர் தன் காதலரைக் கைப்பிடிக்க இருக்கிறார்.
கர்ப்பிணியான தனது புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் அவர் பதிவேற்றம் செய்து வருகிறார்.
இந்நிலையில், எமி தனது காதலருடன் பாஃப்தா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது சிவப்பு நிற உடையில் வந்திருந்த அவர், அழகாக போஸ் கொடுத்து அனைவரையும் அசத்தினார். அதோடு, தனது வீடியோ ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்தவர்கள், அவரது அழகைப் புகழ்ந்து கமெண்ட் வெளியிட்டு வருகின்றனர். கூடவே சிலர் நீங்கள் வெறும் எமி மட்டுமல்ல, இப்போது மம்மியும் கூட எனவே அழகை மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள் என அக்கறையாக எமிக்கு அறிவுரை கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











