பாவம், தினமும் காலையில் கர்ப்பிணி ஏமி ஜாக்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா?
Recommended Video
லண்டன்: 26 வாரங்கள் கர்ப்பமாக இருக்கும் நடிகை ஏமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ் மற்றும் இந்தி படங்கள், ஹாலிவுட் சீரியலில் பிசியாக இருந்த ஏமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கும், லண்டனை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜுக்கும் கடந்த மே மாதம் 5ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

குழந்தை பிறந்த பிறகு அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏமிக்கு வரும் அக்டோபர் மாதம் பிரசவம் நடக்க உள்ளது. இந்நிலையில் ஏமி தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
தினமும் காலையில் எழுந்தால் ஜிம்மிற்கு செல்வதா இல்லை ஒரு கின்னம் தேன் சாப்பிடுவதா என்று போராட்டமாக உள்ளது. ஆனால் பெரும்பாலான நேரம் ஜிம்மிற்கு சென்றுவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார் ஏமி ஜாக்சன்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது எதையாவது சாப்பிடத் தோன்றும். ஏமிக்கு தேன் பிடித்துள்ளது. குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்கும் வரை நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துள்ளார். குழந்தை பிறந்த பிறகு உடலை கட்டுக்கோப்பாக மாற்றிவிட்டு மீண்டும் நடிக்க வருவதே அவரின் திட்டம். தற்போது கர்ப்பமாக இருந்தாலும் ஏமி தனது வருங்கால கணவருடன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கிறார்.
பிரசவத்திற்கு பிறகு குட்டிப் பாப்பாவுடன் உலகம் சுற்றப் போவதாக ஏமி தெரிவித்துள்ளார். இது திட்டமிடாத கர்ப்பம் என்றாலும் குழந்தைக்கு பெற்றோராக நானும், ஜார்ஜும் தயாராகிவிட்டோம் என்கிறார் ஏமி ஜாக்சன்.
ஏமி அடிக்கடி ஜிம்மிற்கு செல்வதாக கூறி போஸ்ட் போட்டதை பார்த்த ரசிகர்கள், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் ஒர்க்அவுட் எல்லாம் செய்யக் கூடாதும்மா. பார்த்து ஜாக்கிரதையாக இருங்க. பிள்ளையை பெற்ற பிறகு ஒர்க்அவுட் செய்யலாம் என்று அக்கறையுடன் அறிவுரை வழங்கியுள்ளனர்.
முன்னதாக ஏமி தனது வருங்கால கணவருக்கு முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தந்தையர் தின வாழ்த்து தெரிவித்தார். ஜார்ஜ் ஒரு சிறந்த தந்தையாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்று ஏமி ஜாக்சன் அடிக்கடி போஸ்ட் போடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











