ப்ரீத்தி, நெஸ் பிரச்சனையில் எங்கள் தலையை போட்டு உருட்டாதீர்கள்: சொல்கிறது பாலிவுட்
மும்பை: ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா சண்டை அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதில் எங்களை இழுக்காதீர்கள் என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த விவகாரம் தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சில பாலிவுட் பிரபலங்கள் கூறுகையில்,

தனுஜா சந்திரா
ப்ரீத்தியை வைத்து சங்கர்ஷ் படம் எடுத்த இயக்குனர் தனுஜா சந்திரா கூறுகையில், அவர் இது குறித்து நன்கு யோசித்து தான் முடிவு எடுத்திருப்பார். நாம் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்போம். இதற்கிடையே நாமாக நீதிபதிகள் போன்று எதையாவது கூற வேண்டாம் என்றார்.

பூஜா பேடி
முன்னாள் இந்தி நடிகை பூஜா பேடி கூறுகையில், நெஸ்ஸும் சரி, ப்ரீத்தியும் சரி பொய் சொல்பவர்கள் அல்ல. இது துரதிர்ஷ்டவசமானது. இது குறித்து நீதிமன்றம் தான் தீர்ப்பு கூற வேண்டுமே தவிர நாம் இல்லை என்றார்.

நீத்து சந்திரா
ப்ரீத்தி தேவையில்லாத விஷயத்தை பெரிதாக்கி அழுபவர் இல்லை. அவர் மிகவும் கண்ணியம் ஆனவர். காதல் முறிவு என்பது எப்பொழுதுமே பிளசன்டாக இருந்தது இல்லை என்று நடிகை நீத்து சந்திரா தெரிவித்தார்.

மூன் மூன் சென்
நடிகையும், எம்.பி.யுமான மூன் மூன் சென் கூறுகையில், நாம் எவ்வளவு தான் பேசினாலும் இது அவர்களின் பிரச்சனை. அவர்கள் இருவரும் இது குறித்து பேசி பிரச்சனையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றார்.


Click it and Unblock the Notifications











