பிரைவேட் போட்டோவை வெளியிட்ட நடிகை.. டேட்டிங் போய் இருக்கீங்களா? சர்ச்சையான வாழ்த்து செய்தி!

சென்னை: பாலிவுட் நடிகர் சல்மான் கானின் 59வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. திரை பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் அவருடன் பல படத்தில் நடித்த ப்ரீத்தி ஜிந்தா, ஒரு பிரைவேட் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த போட்டோ தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட் பிரபலமான நடிகையான ப்ரீத்தி ஜிந்தா, சன்னி தியோல், சைஃப் அலி கான், ரித்திக் ரோஷன், அமீர் கான், ஷாருக்கானுடன் மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் நடித்திருந்தார். அதே போல சல்மான் கானுடன், ஹர் தில் ஜோ பியார் கரேகா, சோரி சோரி சுப்கே சுப்கே, ஹீரோஸ், தில் நே ஜிசே அப்னா கஹா, ஜான்-இ-மான் போன்ற பல படங்களில் ப்ரீத்தி சல்மானுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர்களின் கெமிஸ்ட்ரி திரையில் பார்க்க அழகாக இருக்கும்.

salman khan preity zinta dating

டேட்டிங் போய் இருக்கீங்களா?: இந்நிலையில் நேற்று ப்ரீத்தி ஜீந்தா, சல்மான் கானுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக, அவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அதில் ஒரு போட்டோவில் ப்ரீத்தியும் சல்மானும் ஒரு மேஜை மீது கால் வைத்து போஸ் கொடுத்தனர். மேலும் "ஹேப்பி பர்த்டே சல்மான் கான், ஐ லவ் யூ தி மோஸ்ட் என்று சொல்ல தான் வேண்டும் என்று பிறந்த நாள் வாழ்த்து கூறியிருந்தார். அந்த போட்டோவைப் பார்த்த இணையவாசி ஒருவர், "நீங்கள் இருவரும் எப்போதாவது டேட்டிங் போய் இருக்கீங்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதிலளித்துள்ள ப்ரீத்தி, இல்லவே இல்லை.. அவர் என் நெருங்கிய நண்பர் மற்றும் என் கணவரின் நண்பர் என பதிவிட்டுள்ளார்.

salman khan preity zinta dating

உண்மையான காதல்: மற்றொரு எக்ஸ் பயனாளர், பாலிவுட் காதல் குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ப்ரீத்தி, இன்றைய காலகட்டத்தில் பாலிவுட் ஒரு காதலைப் பார்க்க முடியவில்லை. நானும் நல்ல காதல் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆழமாக காதலிப்பவர்களிடம் இருந்து நல்ல எழுத்து & சில புதிய சிந்தனைகள் வெளிவரும் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போலவே நானும் காத்திருக்கிறேன் என பதில் அளித்துள்ளார்.

salman khan preity zinta dating

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X