கொரோனா டெஸ்ட்.. இன்றோடு முடியுது தனிமை.. துபாயில் இருக்கும் பிரீத்தி ஜிந்தாவுக்குப் பதற்றமாம்!

By

துபாய்: கொரோனாவுக்காக தனிமையில் இருக்கும் நடிகை பிரீத்தி ஜிந்தா, தான் பதற்றத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் பதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

நடிகை பிரீத்தி ஜிந்தா

நடிகை பிரீத்தி ஜிந்தா

இந்நிலையில் கொரோனாவுக்கான தனிமைப்படுத்தல் இன்றோடு முடிவுக்கு வருவதாகக் கூறியுள்ளார் நடிகை பிரீத்தி ஜிந்தா. இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ள அவர், ஐபிஎல்-லில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக இருக்கிறார். இந்த வருட ஐபிஎல் போட்டி கொரோனா காரணமாக துபாயில் நடக்கிறது. இதற்காக, ஐபிஎல் அணிகள் அங்கு சென்றுள்ளன.

கொரோனா சோதனை

கொரோனா சோதனை

நடிகை பிரீத்தி ஜிந்தா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் துபாய் வந்துள்ளார். அங்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு சில முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்குப் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்துள்ளது.

நிம்மதியாக உள்ளேன்

நிம்மதியாக உள்ளேன்

இதனால் உற்சாகத்தில் இருக்கும் அவர், தனது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் தகவல் தெரிவித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன், மூன்றாவது கொரோனா சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதால், மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் உள்ளேன். இன்னும் 2 நாட்கள் தனிமைப்படுத்துதல் மற்றும் இரண்டு சோதனைகள் மீதமுள்ளன என தெரிவித்து இருந்தார்.

 கொஞ்சம் பதற்றம்

கொஞ்சம் பதற்றம்

இந்நிலையில், நேற்று வெளியிட்ட வீடியோவில், ஒரு வார தனிமை சிகிச்சை கிட்டத்தட்ட முடிவுக்கு வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாளை (இன்று) தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியே வரப் போகிறேன். யாரையும் சந்திக்கவில்லை என்றாலும் கொஞ்சம் பதற்றகமா இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை.

விளம்பர படம்

விளம்பர படம்

இன்னொரு கொரோனா டெஸ்ட் பாக்கி இருக்கிறது என்று கூறியுள்ளார். இதிலும் நெகட்டிவ் என்று முடிவு வந்தால், வெளியே வரும் பிரீத்தி, விளம்பர படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். ஒருவர், உங்களுடன் கணவரோ, அம்மாவோ வரவில்லையா என்று கேட்டதற்கு, வருமாறு சமாதானப்படுத்தினேன். அவர்கள் மறுத்துவிட்டனர் என்று சமூக வலைதளத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X