ப்ரீத்தி ஜிந்தா காரை தடுத்து நிறுத்த முயன்ற மாற்றுத்திறனாளி.. கடுப்பில் நடிகை என்ன பண்ணாரு தெரியுமா?
மும்பை: தனக்கும் தனது குழந்தைகளுக்கும் ஒரே வாரத்தில் பொது மக்கள் கொடுத்த தொல்லைகளை பட்டியலிட்டு விளாசி இருக்கிறார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா. அவரது இன்ஸ்டா பதிவுக்கு ஹ்ரித்திக் ரோஷன் முதல் பிரியங்கா சோப்ரா வரை பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சக்கர நாற்காலியில் சென்று கொண்டே நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் காரை வழி மறித்து மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் காசு கேட்டுத் தொல்லை செய்ததாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மேலும், பெண்மணி ஒருவர் அனுமதி கேட்காமல் தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்து விட்டார் என்றும் பிரச்சனையை கிளப்பி உள்ளார்.
ப்ரீத்தி ஜிந்தா ஆவேசம்: பாலிவுட்டில் பிரபலங்களுக்கு தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களால் பிரச்சனை எழுவதாக குற்றச்சாட்டுக்கள் கிளம்பி வருகின்றன. நடிகை நயன்தாரா கோயிலுக்கு சென்ற இடத்தில் செல்ஃபி எடுக்கிறேன் என்கிற பெயரில் பெண் ஒருவர் அவர் தோள் மீது கை வைக்க நயன்தாரா கடுப்படித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதே போல பாலிவுட்டில் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு அனுமதி இல்லாமல் முத்தம் கொடுத்ததை எதிர்த்து பொங்கி இருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா. உயிரே படத்தில் நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடலுக்கு நடனமாடி அனைத்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்த அதே ப்ரீத்தி ஜிந்தா தான்.
மாற்றுத்திறனாளி பண்ண வேலை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா மாற்றுத்திறனாளியை பார்த்து விட்டு கையசைத்து விட்டு பின்னர் தனது காரில் ஏறி செல்கிறார். ஆனால், அவர் காசு கொடுக்கவில்லை என்பதற்காக தனது சக்கர நாற்காலி வண்டியை எடுத்துக் கொண்டு ப்ரீத்தி ஜிந்தாவின் காரை தடுத்து நிறுத்தி காசு கேட்டார் என வீடியோவை ஷேர் செய்து இன்ஸ்டாகிராமில் பொதுமக்கள் என்னையும் என் குழந்தையையும் எந்தளவுக்கு தொந்தரவு செய்கின்றனர் பாருங்கள் என போஸ்ட் போட்டுள்ளார்.

ப்ரீத்தி ஜிந்தா வெளிப்படையாக இந்த கொடுமைகளை எதிர்த்து பேசிவிட்டார் சூப்பர் என ஹ்ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, மலைகா அரோரா உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் விளாசல்: பாவம் அந்த மாற்றுத்திறனாளி அவ்வளவு அழைத்தும் காரை திருப்பிக் கொண்டு ஏன் போறீங்க? அப்படியே காசு கேட்டு இருந்தாலும் கொடுத்திருக்கலாமே இப்படி அவரை வீடியோ எடுத்து வெளியிட்டு அவமதிக்க வேண்டாமே என ப்ரீத்தி ஜிந்தா பண்ண வேலைக்கு எதிர்ப்பு குரல்களும் எழுந்து வருகின்றன. அதே போல நடிகர்களும் மனிதர்கள் தான் அவர்களை இப்படி டார்ச்சர் செய்வது ரொம்பவே தவறான விஷயம் ப்ரீத்தி ஜிந்தா செய்தது தான் சரி என்று ஆதரவு குரல்களும் கிளம்பி உள்ளன.


Click it and Unblock the Notifications











