அடக்கடவுளே.. சீட்டுக் கட்டுப் போல சரிந்த வீடு.. பதறிப்போன பிரபல நடிகை.. இதயமே நின்னுப்போச்சாம்!
மும்பை: ஹிமாச்சலில் ஒரு வீடு இடிந்து விழும் வீடியோவை வெளியிட்டு நடிகை ப்ரீத்தி ஜிந்தா போட்டுள்ள பதிவு சக நடிகைகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த உயிரே படத்தில் "நெஞ்சினிலே நெஞ்சினிலே" பாடலுக்கு நடனமாடி இன்றளவும் கோலிவுட் ரசிகர்கள் மனங்களில் இடம்பெற்றிருக்கிறார் ப்ரீத்தி ஜிந்தா.

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து இந்திய ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ப்ரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டிகளிலும் பஞ்சாப் அணியை வாங்கி கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் கவர்ந்தார்.
ஹிமாச்சலில் நிலச்சரிவு: இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடிரென நிலவெடிப்புகள் ஏற்பட்டன. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் 600க்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்டம் கண்டன.

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் விதமாக ஒரு வீடு அப்படியே இடிந்து மலை உச்சியில் இருந்து கீழே விழும் வீடியோ காட்சி ஒன்றை நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு தனது அதிர்ச்சியை பதிவிட்டுள்ளார்.
பதறிப்போன ப்ரீத்தி ஜிந்தா: இமயமலை சிம்லாவில் பிறந்து வளர்ந்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா பாலிவுட் மற்றும் கோலிவுட்டில் 1998ம் ஆண்டு உயிரே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பின்னர் பாலிவுட்டில் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வந்த ப்ரீத்தி ஜிந்தா 48 வயதிலும் வெப்சீரிஸ்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சமீபத்தில், வெளியான தி நைட் மேனேஜர் வெப்சீரிஸில் நடித்திருந்த ப்ரீத்தி ஜிந்தா இமயமலையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிலச்சரிவு மற்றும் நிலவெடிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
நெஞ்சை நடுங்க வைக்கும் வீடியோ: அப்படியே நொறுங்கிப் போய்விட்டேன், சமீபத்தில் இமயமலையில் நடந்த நிலச்சரிவு வீடியோக்களை பார்த்து என நடிகை ப்ரீத்தி ஜிந்தா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள வீடியோவை பார்த்த தியா மிர்ஸா உள்ளிட்ட பாலிவுட் நடிகைகள், ப்ரீத்தி ஜிந்தாவின் வீடியோவுக்கு ரியாக்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











