ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம்: 'நோ கமெண்ட்ஸ்' என்கிறது பாலிவுட்
மும்பை: நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலர் மீது பாலியல் புகார் கூறியுள்ள விவகாரம் பற்றி பாலிவுட்காரர்கள் மவுனம் சாதிக்கிறார்கள்.
பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நிழல் உலக தாதா தங்களை மிரட்டுவதாக நெஸ் வாடியாவின் தந்தையும், வாடியா குழும தலைவருமான நுஸ்லி வாடியா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து இந்தி திரை உலகினர் பலர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர்.

சல்மான் கான்
ப்ரீத்தியின் நண்பரான நடிகர் சல்மான் கானிடம் நெஸ் வாடியா விவகாரம் குறித்து கேட்டதற்கு அவர் கூறுகையில், நீங்கள் தவறான இடத்தில் வந்து கேட்கிறீர்கள் என்று மட்டும் கூறிவிட்டு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

அமிதாப் பச்சன்
ப்ரீத்தி, நெஸ் வாடியா விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதனால் அது குறித்து நான் கருத்து தெரிவிப்பது நன்றாக இருக்காது என்று அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

வித்யா
ப்ரீத்தி எப்பொழுதுமே தனது உரிமைக்காக போராடுபவர், அது சிறப்பானது. அவரின் துணிச்சலுக்கு முழு மதிப்பெண்கள் என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான்
ப்ரீத்தியின் நெருங்கிய நண்பரான ஷாருக்கான் கூறுகையில், இது அவரின் தனிப்பட்ட பிரச்சனை. இது சட்டப்படி அணுக வேண்டியது. நண்பர் என்ற முறையில் அவரிடம் நான் இது குறித்து பேசுவேன் என்றார்.

மகேஷ் பட்
இயக்குனர் மகேஷ் பட் ட்விட்டரில் கூறுகையில், அழகான காதல் கதை இப்படி வெறுப்பு கதையாக மாறிவிட்டதே. ப்ரீத்தி, நெஸ் வாடியா காதலுக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்ட முடிவா என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











