உங்க மகள் ஜிவாவை கடத்திடுவேன்: தோனியை எச்சரித்த கன்னக்குழி நடிகை

By Siva

மும்பை: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா கூல் கேப்டன் தோனியை எச்சரித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் ஆட்டத்திற்காக ஒரு கூட்டமும், அவரின் குணத்திற்காக ஒரு கூட்டமும் ரசிகர்களாக உள்ளது. தோனிக்கு பாலிவுட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர்.

Preity Zinta warns cool captain Dhoni

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும் தோனி ரசிகை தான். அவர் தான் தோனியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை வெளியிட்டு ப்ரீத்தி கூறியிருப்பதாவது,

கூல் கேப்டனுக்கு நான் உள்பட பல ரசிகர்கள் உள்ளனர். ஆனால் தற்போது எல்லாம் என் ப்ரியம் ஜிவா மீது திரும்புகிறது. நான் ஜிவாவை கடத்திவிடுவேன், ஜாக்கிரதையாக இருக்கவும் என்று நான் அவரிடம் தெரிவித்தேன். இந்த புகைப்படத்திற்கு ஒரு தலைப்பு கொடுங்கள் என்று ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.

தோனியின் மகள் ஜிவாவுக்கு 4 வயது ஆகிறது. ஆனால் அவருக்கு தற்போதே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தோனியின் மனைவி சாக்ஷி தனது மகள் மற்றும் கணவரை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

சாக்ஷியால் தான் ஜிவாவின் புகைப்படங்களை அடிக்கடி பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X