Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
துணிவு படத்தில் விக்ரம் வேதா நடிகர்.. தூள் கிளப்பும் ஹாட் அப்டேட் வேற.. அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்!
சென்னை: இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படத்தில் விக்ரம் வேதா பட நடிகர் பிரேம் குமார் நடித்துள்ளார்.
தனது போர்ஷன் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக புகைப்படத்துடன் அவர் போட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மேலும், துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் குறித்த ஹாட் அப்டேட்களும் கசிந்துள்ளன.
உன்ன நினைச்சி நினைச்சி உருகுகி போனேன்.. அதிதி ராவை பார்த்து உருகும் ரசிகாஸ் !

துணிவு ‘சில்லா சில்லா'
அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் ரிலீஸாக ரெடியாகி விட்டது. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், அஜித் ரசிகர்கள் துணிவு படத்தின் சில்லா சில்லா பாடல் ரிலீசுக்கு ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில், அந்த பாடல் பைரேட்ஸ் தீமில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்யாண் மாஸ்டர் நடனமாடுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்ரம் வேதா நடிகர்
நாட்டுப்புற பாட்டு படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் பிரேம் குமார். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். விக்ரம் வேதா படத்தில் நடித்த இவர் தனது செகண்ட் இன்னிங்ஸை சினிமாவில் சிறப்பாக ஆடி வருகிறார். சமீபத்தில் வெளியான சுழல் வெப்சீரிஸிலும் பிரேம் குமார் நடித்திருந்தார். நடிகர் விஜய்யின் சர்கார் மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்த நிலையில், துணிவு படம் மூலம் அஜித்துடனும் நடித்து உள்ளார்.

டப்பிங் ஓவர்
சமீபத்தில் துணிவு பட ஹீரோயின் மஞ்சு வாரியர் தனது டப்பிங் போர்ஷனை முடித்து விட்டேன் என போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது நடிகர் பிரேம் குமார் தனது போர்ஷனுக்கான டப்பிங்கை முடித்து விட்டேன் என பதிவிட்டு அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்டை கொடுத்துள்ளார்.

சமுத்திரகனியும் இருக்காரு
துணிவு படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் நிலையில், வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் கதாபாத்திரங்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் சமுத்திரகனி போலீஸ் வேடத்தில் இருக்கும் போட்டோவை போட்டு துணிவு படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.

சூடு பறக்கும் ப்ரொமோஷன்
துணிவு படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளை நடிகர் அஜித்தை தவிர்த்து ஒட்டுமொத்த படக்குழுவினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். அஜித் சார்பாக அவரது மனைவி ஷாலினியும் இன்ஸ்டாகிராமில் இணைந்து ப்ரொமோஷன் வேலைகளை ஆரம்பித்துள்ளார். படக்குழுவினரும் தொடர்ந்து துணிவு படம் குறித்த அப்டேட்களை கொடுத்து வருகின்றனர்.