அந்த பயம் இருக்கட்டும்.. கொரோனா எப்படியெல்லாம் யூசாகுது.. சிரிக்க வைக்கும் குறும்படம்.. திருடர்!
சென்னை: தொகுப்பாளர் பிரேம்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள திருடர் குறும்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
நிகழ்ச்சி தொகுப்பாளரான பிரேம்குமார் பல குறும்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவரது நடிப்பில் பயம் என்ற குறும்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது திருடர் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார் பிரேம் குமார். இதில் பூட்டியிருக்கும் வீட்டில் நுழையும் திருடன், பெட்டியை தூக்கி வைத்துக் கொண்டு திறக்கமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு வரும் பிரேம்குமார், வீட்டில் திருடன் இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின்னர் திருடனை பிடித்து துவம்சம் செய்யப் போவதாக கூறி பில்டப் கொடுத்துவிட்டு துடைப்பக்கட்டையுடன் உள்ளே செல்கிறார்.

அப்போது அந்த திருடன் கத்தியை காட்ட, மிரண்டு போய் மூலையில் உட்காருகிறார் பிரேம்குமார். எப்படியாவது திருடரிடமிருந்து பணத்தை காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் பிரேம்குமார், இரண்டு இருமலை போட்டு கொரோனா அறிகுறி உள்ளது போல் காட்டுகிறார்.
மேலும் கொரோனா டெஸ்ட்தான் கொடுத்துவிட்டு வருகிறேன் என்றும் கூறுகிறார். இதனைக்கேட்டு பீதியடைந்த அந்த திருடன், ஆளை விட்டால் போதுமென பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்பிடிக்கிறார். இப்படியாக முடிகிறது அந்த குறும்படம்.

சமயோஜிதமாக நடந்து திருடரை வன்முறையில்லாமல் விரட்டுவதை நகைச்சுவையோடு கூறியுள்ளனர். இதில் பிரேம்குமாருடன் ஜான் என்பவர் நடித்துள்ளார். இந்த குறும்படத்தை ராஜசேகர் எழுதி இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











