Vijayakanth: விஜயகாந்த் உருவத்தை கையில் பச்சைக் குத்திக் கொண்ட பிரேமலதா.. டிரெண்டாகும் வீடியோ!
சென்னை: கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கான பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் மறைவால் அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களும் மிகவும் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், பிரேமலதா தனது கணவர் விஜயகாந்தின் உருவத்தை கையில் டாட்டூவாக குத்திக் கொண்டுள்ளார்.
விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர். கேப்டன் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த விஜயகாந்த் சினிமாவில் பல சாதனைகளை புரிந்து விட்டு நடிகர் சங்க தலைவராக இருந்து அனைவரையும் ஒன்றாக ஒரு குடும்பமாக நடத்தி வந்தார். அதன் பின்னர் தேமுதிக கட்சியை தொடங்கி திமுகவையே எளிதில் ஓரங்கட்டி எதிர்க்கட்சி தலைவராக மாறினார்.

தேமுதிக தலைவர் பிரேமலதா: விஜயகாந்த் உடல்நலக்குறைவாக ஆனதில் இருந்தே கட்சி பொறுப்புகளை கவனித்து வந்த பிரேமலதா விஜயகாந்த் மறைவதற்கு முன்னதாக அவரது உடல்நிலை நலிவடைந்து வருவதை பார்த்து இனிமேல் அவரை ரெஸ்ட் எடுக்க வைக்க வேண்டும் என கட்சி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், பிரேமலதா கட்சி தலைவராக பதியேற்ற சில நாட்களிலேயே விஜயகாந்த் உயிரிழந்தது கடும் விமர்சனங்களை கிளப்பியது.
விஜயகாந்த் டாட்டூ: கேப்டன் விஜயகாந்தை தனது கையில் அப்படியே பச்சைக் குத்திக் கொண்டு தொண்டர்கள் முன் இனிமேல் உங்களுக்கு எல்லாமே நான் தான் என தோன்ற உள்ளார் பிரேமலதா. தனது கணவரும் தங்கள் கட்சியின் நிறுவனருமான மறைந்த விஜயகாந்தின் முழு உருவத்தை கையில் அழகாக பச்சைக் குத்திக் கொள்ளும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் பாராட்டு: பிரேமலதாவின் இந்த அன்பும் பாசமும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. டாட்டூ வீடியோவுக்கு கீழ் பலர் வாவ் என்றும் சிறப்பு என்றும் கமெண்ட் போட்டு பிரேமலதாவை பாராட்டி வருகின்றனர். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக பிரேமலதா தலைமையில் எந்தளவுக்கு ஷைன் ஆகப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











