விஜய்க்கு என்னால ’நோ’ சொல்ல முடியாது.. கோட் படத்தில் கேப்டன் விஜயகாந்த்.. பிரேமலதா க்ரீன் சிக்னல்!
சென்னை: ஜாக்கி சான் நடித்து வரும் எ லெஜண்ட் படத்துல என்ன ஏஐ மூலமாக யங் ஜாக்கி சானை கொண்டு வருவது, இங்கே கோலிவுட்டில் நாங்களே ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்தையே கொண்டு வருகிறோம் என 'கோட்' படத்தில் பெரிய சம்பவத்தையே செய்ய முடிவெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு என பிரேமலதாவே உறுதிப்படுத்தியிருப்பது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி விஜயகாந்த் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தளபதி விஜய் மாதிரி ஒரு ஹீரோ கிடைத்தால் ஏலியன் படமே தாராளமாக எடுக்கலாம் என வெங்கட் பிரபு ஏற்கனவே பழைய பேட்டிகளில் கூறியிருந்த நிலையில், மாநாடு படத்தை பார்த்துவிட்டு வெங்கட் பிரபுக்கு இதே போல வித்தியாசமான ஒரு படத்தை செய்வோம் என விஜய் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

விஜய் படம் சான்ஸ் கிடைத்ததும் அந்த படத்திற்கு ' தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' எனக்கு டைட்டில் வைத்தது முதல் பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என ரசிகர்களின் பேவரைட் நடிகர்களை களம் இறக்கியது வரை ஏகப்பட்ட சம்பவங்களை சத்தமில்லாமல் செய்து வருகிறார் வெங்கட் பிரபு.
3 கோடி வியூஸ்: யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்களான விசில் போடு பாடல் ஒரே நாளில் அதிரடியாக 30 மில்லியன் வியூஸ் அள்ளி மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. அரபி குத்து பாடலின் 24 மணி நேரம் சாதனையை இந்த பாடல் முறியடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 லெஜெண்ட்: விஜய், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா என 90ஸ் கிட்ஸின் மூன்று ஃபேவரைட்டான லெஜண்டுகளை ஒன்றாக ஒரே பிரேமில் ஆடவைத்து மாஸ் காட்டிவிட்டார் வெங்கட் பிரபு. யுவன் சங்கர் ராஜாவின் இசை மற்றும் மதன் கார்க்கியின் பாடல் வரிகள் குறித்து ஏகப்பட்ட ட்ரோல்கள் கிளம்பினாலும் விஜய் ரசிகர்கள் அதையெல்லாம் தவிடு பொடியாக்கும் வகையில் பாடலை பெரிய அளவில் ஹிட் ஆக்கி விட்டனர்.
மீண்டும் விஜயகாந்த்: செந்தூரப் பாண்டி படத்தில் விஜய்யை அறிமுகப்படுத்திய விஜயகாந்த் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சுமார் 17 படங்களில் நடித்துள்ளார். கோட் படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்களை கொண்டு வரும் முயற்சியில் வெங்கட் பிரபு இயங்கி வரும் நிலையில், மீண்டும் விஜயகாந்த்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கோட் படத்தில் கொண்டு வரப் போவதாக பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார்.
நோ சொல்ல முடியாது: வெங்கட் பிரபு இது குறித்து தன்னிடம் பேசியபோது விஜய் மற்றும் வெங்கட் பிரபுவுக்கு என்னால் நோ சொல்ல முடியாது. மேலும், கேப்டன் விஜயகாந்த் இடத்தில் இருந்துதான் நான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். சின்ன வயதிலிருந்து விஜய் மீது விஜயகாந்த்துக்கு ரொம்பவே பாசம் அதிகம். அவர் இருந்திருந்தால், நிச்சயம் தடை சொல்லி இருக்க மாட்டார். திருமணமாகி வந்ததிலிருந்து இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்துடன் நெருங்கி பழகி வருகி்றேன்.
ஏஐ மேஜிக்: வெங்கட் பிரபுவை சிறுவயதிலிருந்தே தெரியும் விஜய்க்கும் வெங்கட் பிரபுவுக்கும் எப்போதுமே என்னால் நோ சொல்ல முடியாது. கேப்டனை ஒரு முக்கிய காட்சியில் ஏஐ மூலம் கொண்டு வர முயற்சித்து வருவதற்கு அனுமதி கேட்டனர். விஜய்யும் தேர்தல் முடிந்து வந்து என்னை சந்திப்பதாக கூறியுள்ளார் என பிரேமலதா சமீபத்திய பேட்டியில் கோட் படத்தில் விஜயகாந்தின் ஏஐ கேமியோ குறித்து ஓபனாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











