விறுவிறுப்பான சூட்டிங்கில் பிரேமலு 2.. சூட்டிங்கில் யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா?

சென்னை: மலையாளத்தில் உருவாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ் ஹிட் கொடுத்தப்படம் பிரேமலு. காதலையும் காமெடியையும் இணைத்து இந்தப் படத்தில் கலாட்டா செய்திருந்தார் இயக்குநர் கிரிஷ். படம் மலையாளத்தில் ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது.

பிரேமலு படம் அதிகமாக தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு காரணம் இந்த படம் ஹைதராபாத்தில் துவங்குவதாக காணப்பட்டதுதான். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது மிகவும் பிரம்மாண்டமான வகையில் இயக்கப்பட்டு வருகிறது. படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக முன்னதாகவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Premalu Naslen Mamitha baiju Krish tamil cinema

பிரேமலு படம்: மலையாளத்தில் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகி வரும் படங்களுக்கு தென்னிந்திய மொழி ரசிகர்கள் மிகச் சிறப்பான வரவேற்பை சமீப காலங்களில் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரேமலு படம் மிகச் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. நஸ்லன், மமிதா பைஜு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப் படத்தின் கதைக்களம் மிகச்சிறப்பாக அமைந்து தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து சர்வதேச அளவில் 130 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்தது.

பிரேமலு 2 படம்: இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. முதல் பாகம் வெவ்வேறு தினங்களில் தமிழ். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியான சூழலில் இரண்டாவது பாகத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர். முதல் பாகத்தில் கதாநாயகன் இங்கிலாந்துக்கு படிக்க செல்வதுடன் இந்த கதை நிறைவடைவதாக காட்டப்பட்டது. இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் நஸ்லன் மற்றும் மமிதா பைஜு காதலர்களாகவே தொடர்வார்களா அல்லது திருமணம் செய்து கொண்ட பின்பு அவர்களது வாழ்க்கை கதையை இரண்டாவது பாகம் கூறுமா என்று தற்போதே படத்தின் கதை குறித்து ரசிகர்கள் யோசிக்க துவங்கியுள்ளனர்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் படம் அடுத்த ஆண்டு ரிலீசாகவுள்ளதாக முன்னதாக படத்தின் அறிவிப்பின்போதே ரிலீஸ் குறித்தும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இதற்கான போஸ்டரையும் வெளியிட்டனர். தற்போது நடந்து வரும் ஷூட்டிங்கில் நஸ்லன் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சூழலில் அடுத்த பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக படக்குழுவினர் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

பகத் பாசில் தயாரிப்பு: இரண்டாவது பாகத்தை பகத் பாசில், திலீஷ் போத்தன் மற்றும் ஷியாம் புஷ்கரன் தயாரித்து வருகின்றனர். கிரிஷ் ஏடி மற்றும் கிரண் ஜோசு இணைந்து இந்தப் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளனர். தமிழில் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தப் படத்தின் முதல் பாகம் இளமை துள்ளலுடன் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த நிலையில், இரண்டாவது பாகமும் அதையே வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X