கொல்கத்தாவை கொத்துக்கறி போட்ட சென்னை.. தோனிக்காக பெரிய விசில் அடித்து ரசித்த மமிதா பைஜு!

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி நடைபெற்றாலே சினிமா பிரபலங்கள் படையெடுத்து வந்து பார்த்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகின்றனர். நடிகர்களை விட அதிகளவில் நடிகைகள் மஞ்சள் ஜெர்ஸியை அணிந்துக் கொண்டு சேப்பாக்கம் மைதானத்தையே கவர்ச்சி மைதானமாக மாற்றி விடுகின்றனர்.

இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை இதுவரை ஸ்ருதிஹாசன், ஷாலினி, யாஷிகா ஆனந்த், ரவீனா தாஹா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நடிகைகள் பார்த்து ரசித்துள்ளனர்.

Premalu actress Mamitha Baiju watched CSK vs KKR Ipl match at Chepauk


தனுஷ், லோகேஷ் கனகராஜ், சதீஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சூரி என நடிகர்களும் படையெடுத்து பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கேரள நடிகை மமிதா பைஜு நேற்று நடைபெற்ற சிஎஸ்கே vs கேகேஆர் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்து ரசித்த புகைப்படங்கள் தற்போது டிரெண்டாகி வருகிறது.

சிஎஸ்கே வெற்றி: கடந்த இரு போட்டிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சொதப்பி வந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் எல்லாம் மோதினால் அவ்வளவு தான் என்றும் சேப்பாக்கம் மைதானத்திலேயே உங்களுக்கு சம்பவம் செய்வாங்க சூப்பர் ஸ்டார் ஆசியுடன் என ரஜினிகாந்த் ரசிகர்களே கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால், ஹோம் கிரவுண்டில் விட்டு விடுவோமே என்கிற ரேஞ்சில் சென்னை அணியினர் பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவருக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. 9 விக்கெட்டுகள் வேற. அதன் பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரிலேயே வெறும் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 141 ரன்கள் விளாசி வெற்றிப் பெற்றது.

சேப்பாக்கத்தில் பிரேமலு ஹீரோயின்: மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பிரேமலு திரைப்படம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது. 100 கோடி வசூல் அந்த படம் அள்ள முக்கிய காரணமே மமிதா பைஜுவை பார்த்து கேரள ரசிகர்கள் ஜொள்ளு விட்டது தான். மலையாளத்தை தொடர்ந்து தமிழில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக ரெபல் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் தியேட்டரில் ஓடாமல் ஓடிடியில் 2 வாரத்தில் ஓடி வந்து விட்டது. அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமாகி வருகிறது. இந்நிலையில், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களை பிடிக்க வலை வீசி வரும் மமிதா பைஜு சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியை கண்டு ரசித்தார்.

யெல்லோ ஜெர்ஸி: சிஎஸ்கே அணிக்கு சப்போர்ட் செய்யும் விதமாக யெல்லோ ஜெர்ஸியில் அவர் அழகாக கண்ணுக்கு அருகே மஞ்சள் பெயின்ட் எல்லாம் பூசிக் கொண்டு சிரித்த சிரிப்பை பார்த்து ரசிகர்கள் மயங்கியே போய் விட்டனர். பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் படத்தில் நடித்து அறிமுகமாக இருந்த மமிதா பைஜு அந்த படத்தில் இருந்து சூர்யா விலகியதும் அவரும் விலகி விட்டார்.

பாலா அடித்தார்: பிரேமலு படத்திற்காக அளித்த பேட்டியில் பாலா தன்னை அடித்ததாக மமிதா பைஜு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், அதன் பின்னர் நான் பேசிய பெரிய பேட்டியில் அதை மட்டும் கட் செய்து போட்டு கஷ்டப்படுத்துகின்றனர். பாலா எனக்கு தொல்லை கொடுக்கவில்லை என விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். விரைவில் பல தமிழ் படங்களில் மமிதாவை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X