லால் சலாம் படத்துக்கு போட்டியாக வெளியான மலையாள படம்.. பாக்ஸ் ஆபிஸில் 50 கோடியை நெருங்கிடுச்சே!

திருவனந்தபுரம்: நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை போலவே தற்போது வெளியான பிரேமலு திரைப்படமும் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாயாக நடித்த லால் சலாம் திரைப்படம் வெளியான பிப்ரவரி 9ம் தேதி தான் இந்த படமும் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஆனால், லால் சலாம் படத்தின் வசூலை விட 2 மடங்கிற்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.

Premalu beats Rajinikanths Lal Salaam in twice at the Box Office


மலையாள படம் பிரேமலு: இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென், மமிதா பைஜு, அல்தாஃப் சலீம் மற்றும் மீனாக்‌ஷி ரவிந்திரன் நடிப்பில் வெளியான படம் தான் பிரேமலு. காதல் படமாக இளைஞர்களை கவரும் விதமாக வெளியான இந்த படம் காதல் மற்றும் காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி இந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் ஈட்டிய படமாக பிரேமலு மாறியிருக்கிறது.

லால் சலாம் பாக்ஸ் ஆபிஸ்: கடந்த 11 நாட்களாக ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது. பிப்ரவரி 9ம் தேதி வெளியான இந்த படம் இதுவரை 16.34 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டியிருக்கிறது. 11வது நாளான நேற்று வெறும் 14 லட்சம் ரூபாய் மட்டுமே திரையிட்ட தியேட்டர்களில் லால் சலாம் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

50 கோடியை நெருங்கும் வசூல்: அதே நாளில் வெளியான மலையாள திரைப்படம் பிரேமலு படத்தை கேரளா ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் உள்ள ரசிகர்கள் அனைவருமே கொண்டாட ஆரம்பித்து விட்டனர். காதலர் தினத்தை முன்னிட்டு சரியாக வெளியான பிரேமலு திரைப்படம் இதுவரை 44.25 கோடி ரூபாய் வசூலை 11 நாட்களில் அள்ளியிருக்கிறது. இந்த வாரத்திற்குள் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மயுகம் வசூல்:
இந்த ஆண்டு மலையாள சினிமா ஆரம்பத்தில் இருந்தே மாஸ் காட்டி வருகிறது. பிரேமலு படத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் வெளியான மம்மூட்டியின் பிரம்மயுகம் திரைப்படம் 5 நாட்களில் 14 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருக்கிறது. இந்த வார இறுதிக்குள் 25 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X