Actor Ajith: அஜித் மகனாக இணையும் பிரேமலு பட நாயகன்.. குட் பேட் அக்லி படத்தின் புதுவரவு!

சென்னை: நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. ஐதராபாத்தில் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடிகர் அஜித்தின் மாஸ் இன்ட்ரோ பாடலுக்கான சூட்டிங் நடத்தப்பட்டு வரும் சூழலில் நாளைய தினம் இந்த படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் ஒட்டுமொத்தமாக நிறைவடையுள்ளது.

அடுத்ததாக குட் பேட் அக்லி டீம் ஜப்பான் புறப்பட உள்ளதாகவும் முன்னதாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கை அஜித் நிறைவு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள பட இளம் ஹீரோ இணைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Ajithkumar Good bad ugly Premalu Naslen tamil cinema

நடிகர் அஜித்: நடிகர் அஜித் -ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் ஹைதராபாத்தில் அடுத்தடுத்த ஸ்டூடியோக்களில் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அஜித்தின் மாஸான இன்ட்ரோ பாடலின் சூட்டிங் நடந்துவரும் சூழலில் நாளையுடன் இந்த சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக துவங்கப்பட்ட இந்த பாடலுக்கான ஷூட்டிங்கில் ஏராளமான டான்சர்கள் இணைந்திருந்தனர். அதிரடியாக இந்தப் பாடலின் சூட்டிங் நடந்து வருகிறது. இந் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்: விடாமுயற்சி படத்தின் சூட்டிங் மீண்டும் அசர்பைஜானில் துவங்கப்பட்டு தொடர்ந்து 40 நாட்கள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஷூட்டிங்கில் அஜித்துடன் திரிஷா இணையவுள்ளதாகவும் அடுத்ததாக ரெஜினா கசாண்ட்ராவும் இந்த ஷெட்யூலில் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங்கில் அஜித் இணையவுள்ளார். அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக் குழுவினர் ஜப்பான் செல்ல உள்ளதாகவும் அங்கு தொடர்ந்து சில தினங்கள் படத்தின் ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அஜித்துடன் இணையும் மலையாள ஹீரோ: இந்நிலையில் நடிகர் அஜித்துடன் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் அஜித்தின் மகனாக நஸ்லன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இவரது நடிப்பில் வெளியான பிரேமலு படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் மலையாளத்தில் முதலில் வெளியிடப்பட்டு தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என மூன்று மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து சர்வதேச அளவில் 130 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. இந்நிலையில் பிரேமலு 2 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

பிரேமலு நாயகன்: பிரேமலு படம் மூலம் தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நஸ்லன் அஜித்தின் குட் பேட் அட்லி படத்தில் இணைந்துள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பிரேமலு படத்தில் இவரது கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. மமிதா பைஜு உடனான காதல் மற்றும் காமெடி என இந்த படத்தை சிறப்பாக்கி இருந்தார் நஸ்லன். இந்நிலையில் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாகவும் தற்போது அஜித்துடனான படத்தை அவர் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து தமிழிலும் இவர் ஒரு வலம் வருவார் என எதிர்பார்ககலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X