”ஏய் உன் தம்பியை பார்த்துட போறாங்க மூட்றா”.. ஆபாச வசனங்களுடன் வெளியான பிரேமலு தமிழ் டிரெய்லர்!

சென்னை: கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் மலையாளத்தில் கடந்த மாதம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு திரைப்படம் ஒரே மாதத்தில் 100 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அந்த படம் இந்த வாரம் தமிழ் ரசிகர்களுக்காக தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது.

வரும் மார்ச் 15ம் தேதி பிரேமலு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அதனை முன்னிட்டு புரமோஷனுக்காக டிரெய்லர் தற்போது வெளியானது.

Premalu movie Tamil Trailer gets trolled for heavy adult content dialogues

அந்த டிரெய்லரில் இளைஞர்களை கவரும் ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும் மோசமான வசனங்களும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. பெண்களை பற்றிய தவறான வசனங்களும் தமிழில் அப்படியே இடம்பெற்றுள்ள நிலையில், பலரும் அந்த படத்தை விமர்சித்து வருகின்றனர்.

காதலர் தின ஸ்பெஷல்: தமிழில் காதலர் தினத்தை முன்னிட்டு லவ்வர் படம் வெளியானது. அந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆனால், அந்த படம் ஓடாத ஓட்டத்தை மலையாளத்தில் அதே காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9ம் தேதி வெளியான பிரேமலு படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.

100 கோடி வசூல்: கிரிஷ் ஏடி இயக்கத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு நடித்து வெளியான இந்த திரைப்படம் காதலர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. அதி விரைவாக 75 கோடி வசூலை எட்டிய இந்த திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் ரிலீஸ் காரணமாக மலையாளத்தில் சற்றே டல் அடித்தது. ஆனால், மஞ்சுமெல் பாய்ஸ் 150 கோடி வசூலை தாண்டிய நிலையில், பிரேமலு திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டியது.

Premalu movie Tamil Trailer gets trolled for heavy adult content dialogues

தமிழ் டிரெய்லர்: வரும் மார்ச் 15ம் தேதி தமிழில் பிரேமலு திரைப்படம் வெளியாகிறது. சச்சினாக இந்த படத்தில் மலையாள நடிகர் நஸ்லென் நடித்துள்ளார். ரீனு எனும் கேரக்டரில் மமிதா பைஜு நடித்துள்ளார். வணங்கான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக வேண்டிய மமிதா பைஜு அந்த படத்தில் இருந்து விலகிய நிலையில், பிரேமலு படத்தின் மூலமாகவே தமிழில் அவர் நம்ம ஊர் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாற காத்திருக்கிறார். அந்த படத்தின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகி இளைஞர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

தம்பியை பார்த்துட போறாங்க: ஆபாசமான வசனங்கள் நிறைந்த டிரெய்லராக பிரேமலு தமிழ் டிரெய்லர் உள்ளது. குளித்து விட்டு ஜட்டிக் கூட போடாமல் ஹீரோ டவலுடன் ஹீரோயின் போல டான்ஸ் ஆடுவதை பார்த்து விட்டு, அவனது நண்பன் ஒருத்தன், "ஏய் உன் தம்பியை பார்த்துட போறாங்க மூட்றா" என பேசும் தமிழ் வசனங்களை கேட்கவே கொடுமையாக உள்ளது என நெட்டிசன்கள் பிரேமலு படத்தின் வசனத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.

அந்த பொண்ணு ஐட்டம்: மேலும், ஹீரோயினை பார்த்து "அந்த பொண்ணு சரியான ஐட்டம் மச்சி" என பேசும் தமிழ் வசனங்களும் டிரெய்லரில் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தின் டிரெய்லரை பார்த்தால் இந்த படமெல்லாம் எப்படி 100 கோடி வசூல் ஈட்டியது என்றே தெரியவில்லையே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X