கமல் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சொன்ன கூஸ்பம்ப்ஸ் பதில்!
சென்னை: இந்தியன் 2 மற்றும் பிக் பாஸ் என படு பிசியாகி உள்ள கமல்ஹாசன் அடுத்தடுத்தும் தனது பட அறிவிப்புகளை வெளியிட்டு அதற்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அழகான பியானோ அருகே நின்றபடி எடுத்த புதிய புகைப்படத்தை சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த போஸ்ட்டுக்கு கீழ் ஏகப்பட்ட பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் பிரதீப் என கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால் பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஒரு கமெண்ட் போட்டிருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஜஸ்டிஸ் ஃபார் பிரதீப்: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்த நிலையில், ரசிகர்கள் யாருக்குமே எந்தவொரு பெண்ணும் பாதிக்கப்பட்டது போல தெரியவில்லை என்றும் தேவையில்லாமல் பிரதீப்பை உமனைசர் ரேஞ்சுக்கு முத்திரை குத்தி வெளியே அனுப்பி கமல் பெரிய தவறு செய்து விட்டார் என தொடர்ந்து பிரதீப் ஆண்டனி ரசிகர்கள் ஜஸ்டிஸ் ஃபார் பிரதீப் என கமலிடம் கேட்டு வருகின்றனர்.
பியானோ அருகே பக்காவா: ஒரு பக்கம் பிக் பாஸ் சீசன் 7 என்றால் இன்னொரு பக்கம் இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், எச். வினோத் இயக்கத்தில் 233வது படமும் மணிரத்னம் இயக்கத்தில் 234வது படமும் பிரபாஸ் படமான கல்கி படத்திற்கு டப்பிங் பணிகள் என பல பணிகளில் பிசியாக உள்ளார் உலக நாயகன். இந்நிலையில், கொஞ்சம் கூலாக இருக்கலாமே என பியானோ அருகே எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அல்போன்ஸ் புத்திரன் உற்சாகம்: இந்த பதிவை கமல் எனக்காகத் தான் போட்டுள்ளார் என நினைத்துக் கொள்கிறேன். உடல்நலக்குறைவு காரணமாக சினிமாவில் இனிமேல் பணியாற்றப் போவதில்லை எனக் கூறியிருந்த எனக்கு கமல்ஹாசன் பியானோ அருகே நின்று வெளியிட்ட புகைப்படம் நான் கற்றுக் கொண்ட இசையை பயன்படுத்தி இன்னும் ஒரு 5000 பாடல்களை இசையமைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தலாம் என உற்சாகப்படுத்துகிறது இந்த பதிவு என கூஸ்பம்ப்ஸ் கமெண்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











