Don't Miss!
- News
"நில்லுங்கப்பா".. கலங்கும் எடப்பாடி பழனிசாமி?.. 18 மாஜிக்களாமே.. அதுவும் 3 மணி நேரம்.. அடுத்த சரவெடி
- Lifestyle
பெண்கள் வயாகரா எடுத்துக்கொள்ளலாமா? எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
ஜெய் பீம் படக்குழுவினரை புகழ்ந்து தள்ளிய பிரேமம் பட இயக்குனர்!
சென்னை: நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக நடித்துள்ள திரைப்படம் ஜெய் பீம்
இயக்குனர் தா ச ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருகிறது
ஜெய்பீம் படத்தை பார்த்த பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் தற்போது பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜெய்பீம் படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகை ஆத்மிகாவுக்கு எப்போதும் ஃபேவரிட் உடை இதுதானாம்.. அவரே பதிவிட்ட க்யூட் புகைப்படம்!

ஜெய்பீம்
சமூக அக்கறை கொண்ட படங்களாகவே சூர்யாவின் சமீபத்திய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம் இயக்குனர் தா ச ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பழங்குடியின மக்களை பற்றிய திரைப்படமாக வெளியானது.

வழக்கறிஞர் சந்துருவாக
உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வெளியான ஜெய்பீம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருகிறது. இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வந்த சூர்யா இந்தப் படத்தில் முதல்முறையாக வழக்கறிஞராக நடித்துள்ளார். வழக்கறிஞர் சந்துரு வாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்க மணிகண்டன் லிஜோமொல் ஜோஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ்,எம்எஸ் பாஸ்கர், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆஸ்கர் சேனலில் இடம் பெற்று சாதனை
அதிகாரத்தின் பெயரில் காவல்துறை அப்பாவி மக்களின் மீது அதிகாரத்தை செலுத்தி செய்யாத குற்றத்திற்கு அவர்களுக்கு தண்டனை வழங்கப் படுவதற்கு எதிராக நடந்த பல்வேறு வழக்குகளில் ஒன்றாக ராஜாகண்ணு, செங்கேணி வழக்கை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது. மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தி உள்ளது. மேலும் சர்வதேச அளவில் பல விருதுகளையும் குவித்து வரும் சூழலில் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் படத்தின் காட்சிகள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது . இந்திய சினிமாவிலேயே முதன்முறையாக ஆஸ்கர் சேனலில் இடம் பெற்றுள்ள ஜெய்பீம் படத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரேமம் பட இயக்குனர் பாராட்டுக்கள்
இந்நிலையில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜெய்பீம் படத்தை பாராட்டி உள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது ஜெய்பீம் படம் பார்த்தேன் . என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இப்படி ஒரு போல்டான கதையை துணிச்சலாக எடுத்து தயாரித்தற்காக சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ஜெய்பீம் பட குழுவினருக்கு எனது அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். என இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜெய்பீம் படத்தை பாராட்டியுள்ளார்.