விஜய்யை ஏமாற்றிய பிரேமம் இயக்குனர்... ஆசை காட்டி மோசம் செஞ்சிட்டாரே!

சென்னை : பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்

நடிகை ரஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்

புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட விஜய் பிரேமம் இயக்குனர் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார்.

வசூல் மன்னன்

வசூல் மன்னன்

நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவையும் கடந்து பல நாடுகளிலும் மாஸ்டர் திரைப்படம் சக்கை போடு போட்டது. விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து விஜய் நெல்சன் உடன் கூட்டணி அமைத்தார்

பக்கா ஆக்ஷன்

பக்கா ஆக்ஷன்

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்த நெல்சன்,விஜய் கூட்டணியில் உருவான பீஸ்ட் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது . பீஸ்ட் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படம் மிகவும் திருப்தி படுத்தி உள்ளது.

நேரடி தமிழ் திரைப்படம்

நேரடி தமிழ் திரைப்படம்

பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த வம்சி முதல் முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள திரைப்படம் நேரடி தமிழ் திரைப்படம் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக நடிகை ரஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது

விஜய் ஏமாந்து போனார்

விஜய் ஏமாந்து போனார்

இந்த நிலையில் பிரேமம் இயக்குனர் பற்றிய விஜய் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒருநாள் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கதை கூறுவதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். விஜய் தனக்குதான் கதை கூற வருகிறார் என ஆசையாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்து அல்போன்ஸ் புத்திரன் விஜய்யின் மகன் சஞ்சய்- க்கு கதைக் கூற வந்துள்ளதாக கூறியுள்ளார் . தனக்கு தான் கதை சொல்லப் போகிறார் என ஆசையாக இருந்த விஜய் அப்போது ஏமாந்து போனாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X