விரைவில் சினிமாவில் என்ட்ரி விஜய் மகனுக்கு கதையுடன் வந்த இயக்குநர்.. சஞ்சய்யின் பதில் என்ன தெரியுமா?
சென்னை : விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் ஏப்ரல் 13ந் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை ப்ரோமோட் செய்யும் வகையில் சன் டிவியில் விஜய் இன்டர்வியூ கொடுத்திருந்தார்.
இன்று இணையத்தில் பேசு பொருளாக இருப்பதே விஜய்யின் நேருக்கு நேர் நிகழ்ச்சிதான்.
பீஸ்ட் படத்தில் விஜய், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பீஸ்ட்
பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு நாளே உள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் திரைப்படம் இது என்பதால் இந்த திரைப்படத்தை திருவிழாப்போல கொண்டாட ரசிகர்கள் தயாராக உள்ளனர். பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய்யுடன் நேருக்கு நேர்
இந்நிலையில் நடிகர் விஜய் சன் டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், இயக்குநர் நெல்சனின் பல கேள்விக்கு அழகாக பதிலளித்தார். எப்போதும் அமைதியாக இருக்கும் விஜய் இன்டர்வியூவிலும் அதேபோலவே பேசினார். இவரின் இந்த நேர்காணல் சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது.

பிரபல இயக்குநர் கதை சொன்னார்
உங்களுடைய மகன் சஞ்சய் எப்போது நடிக்க வருவார் என்று நெல்சன் கேட்டார். அதற்கு பதிலளித்த விஜய், பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன், கதை சொல்ல வந்தார். நானும் எனக்கு தான் கதை சொல்ல வருகிறார் என நினைத்தேன். ஆனால், அது என் மகன் சஞ்சய்க்கான கதை என்றார். கதையை கேட்டேன் கதை நன்றாகத்தான் இருந்தது. அதில் சஞ்சய் நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

விரைவில் சினிமா என்ட்ரி
இதுபற்றி சஞ்சய்யிடம் பேசினேன்,ஆனால், அவர் இரண்டு வருஷம் என்னை விட்டு விடுங்கள் என்று கூறிவிட்டார். சினிமாவில் நடிக்க வேண்டுமா... வேண்டாமா என்பது அவருடைய விருப்பம். அப்படி சினிமாவில் நடிக்க வேண்டும் என விரும்பினால் நிச்சயம் சஞ்சய்க்கு துணையாக இருப்பேன் என்று விஜய் கூறினார். இதற்கு முன்பே சஞ்சய் சினிமாவில் நடிப்பார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், சஞ்சய் விரைவில் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











