»   »  ஒரு நாள் முதல்வராக கமல்! - இது அல்போன்ஸ் புத்திரன் ஆசை

ஒரு நாள் முதல்வராக கமல்! - இது அல்போன்ஸ் புத்திரன் ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கு மட்டும் வாய்ப்பு அமைந்தால், கமல் ஹாஸனை தமிழகத்தின் ஒரு நாள் முதல்வராக ஆக்குவேன், என ப்ரேமம் இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தெரிவித்துள்ளார்.

நேரம், பிரேமம் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:

Premam director wants Kamal to become one day CM

"முதல்வன் படத்தில் வருவது போல ஒரு வாய்ப்பு கிடைத்தால், கமல் ஹாஸனை தமிழகத்தின் ஒரு நாள் முதல்வராக கமலை நியமிக்க வேண்டும். ஜஸ்ட் ஒரே ஒரு நாள். அப்படி நடந்தால், அவர் அரசை அடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வார். புதுமையான யோசனைகள் தருவார். இது என் எண்ணம் மட்டுமே. ஏதாவது தவறாகச் சொல்லியிருந்தால் மன்னிக்க வேண்டும்."

கமல், தமிழகத்தின் ஒரு நாள் முதல்வராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதை வைத்து இப்படி அல்போன்ஸ் புத்ரன் கூறுகிறார் என்று தெரியவில்லை.

English summary
If there is a option like in mudhalvan film...to appoint a chief minister for one day . I think Kamal Hassan should be given one day for caring Tamil Nadu - Director Alphones Puthren.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil