அஜித் படத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரனா?...அதுவும் இந்த படத்திலா ?

சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர் தற்போது அனைவராலும் எதிர்பார்க்கப்படும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். வெளிநாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் கூட வலிமை அப்டேட் கேட்கும் அளவிற்கு அஜித் ரசிகர்கள் வலிமை படத்தை பாப்புலர் ஆக்கி வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் நடித்த ஹிட் படம் ஒன்றில் பிரேமம் படத்தின் டைரக்டர் அல்ஃபோன்ஸ் புத்திரனும் பணியாற்றியுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. உடனே வலிமை படத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடிக்கிறாரா, இயக்கத்தில் பணியாற்றி உள்ளாரா என நினைத்து விட வேண்டாம்.

தீனா படத்தில் இவரா

தீனா படத்தில் இவரா

அஜித் - லைலா நடிப்பில் 2001 ல் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படமான தீனா படத்தில் ஒரு சிறிய ரோலில் தான் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடித்துள்ளாராம். இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பரவ விட்டு வருகின்றனர்.

அட இது இவர் தானா

அட இது இவர் தானா

ரெஸ்டாரன்ட் ஒன்றில் அஜித்தும் லைலாவும் பேசிக் கொண்டிருக்கும் சீனில் லைலாவை ஈவ் டீசிங் செய்யும் கும்பலில் ஒருவராக அல்ஃபோன்ஸ் புத்திரன் நடித்திருந்தார். இந்த படத்தில் இதே போன்ற சில சீன்களிலும் இவர் நடித்துள்ள தகவல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டிவி ஷோவிலும் வந்துள்ளாரா

டிவி ஷோவிலும் வந்துள்ளாரா

ஆரம்பத்தில் தமிழில் நிறைய குறும்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன், மலையாளத்தில் பிளாக்பஸ்டர் படமான பிரேமம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானார். நாளைய இயக்குனர் என்ற ஷோவிலும் இவர் கலந்து கொண்டுள்ளார்.

வைரலாக்கும் தல ரசிகர்கள்

வைரலாக்கும் தல ரசிகர்கள்

ஏற்கனவே அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் ஒன்று தீனா. இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்தை, தல என அவரது ரசிகர்கள் கூப்பிட துவங்கினர். இந்த நிலையில், தீனா படத்தில் அல்ஃபோன்ஸ் புத்திரன் நடித்த சீனின் ஃபோட்டோக்களை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பாட்டில் பிஸியான அல்ஃபோன்ஸ்

பாட்டில் பிஸியான அல்ஃபோன்ஸ்

அல்ஃபோன்ஸ் புத்திரன் தற்போது ஃபகத் ஃபாசில், நயன்தாரா நடிக்கும் பாட்டு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் அப்டேட் வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X