காட்டுக்குயிலு மனசுக்குள்ள மடோனா போல யாருமில்லை... நடுகாட்டில் விவகார போட்டோ ஷூட் !
சென்னை : ப்ரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் நடிகை மடோனா செபாஸ்டின்.
மலையாளத்தில் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.
தமிழிலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து வரும் இவர் இப்பொழுது நடுகாட்டில் அறைகுறை ஆடையில் நடத்தியுள்ள ஃபோட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

வானம் கொட்டட்டும்
இயக்குனர் மணிரத்னதிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய தனசேகரன் இயக்குனராக அறிமுகமான வானம் கொட்டட்டும் சென்ற ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை மடோனா செபாஸ்டின்
நடித்திருந்தார். மேலும் அதில் சரத்குமார்,ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு பாக்யராஜ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஷ்யாம் சிங்க ராய்
நடிகர் சசிகுமார் பக்கா வில்லேஜ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்க இதில் கதாநாயகியாக நடித்திருக்கும் மடோனா செபாஸ்டின் கன்னடத்தில் கொட்டிகொப்பா 3 மற்றும் தெலுங்கில் ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்களை குஷிப்படுத்தி
நடிகையாக பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இதுவரை மலையாளத்தில் பல பாடல்களைப் பாடி சிறந்த பாடகியாகவும் இருக்கிறார். நடிப்பு, சிங்கிங் என பல திறமைகளை கொண்டுள்ள மடோனா அனைவரும் மலைத்துப் போகும் அளவிற்கு அடிக்கடி பல போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

விவகாரமான போஸ்
எதையும் மிகவும் வித்தியாசமாக செய்யும் மடோனா செபாஸ்டின் இப்பொழுது நடுக்காட்டில் ஹாலிவுட் ஆக்சன் ஹீரோயின் ரேஞ்சுக்கு நச்சுன்னு பிளாக் ட்ரஸில் தொடை அழகு தெரிய பஞ்சு மெத்தையின் மீது அம்சமாக உட்கார்ந்துகொண்டு விவகாரமாக போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வர அதில் ஒரு தீவிர ரசிகர் காட்டுக்குயிலு மனசுக்குள்ள மடோனா போல யாருமில்லை என தனி மெட்டமைத்து வர்ணித்துள்ளது அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











