Premam: மல்லுவுட் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்... ரீ-ரிலீஸாகும் பிரேமம்... மலர் டீச்சர் கம்பேக்!

சென்னை: மலையாளத்தில் 2015ம் ஆண்டு வெளியான பிரேமம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்த இந்தப் படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். இப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருக்கும் பிரேமம், விரைவில் ரீ-ரிலீஸாகவுள்ளது.

ரீ-ரிலீஸாகும் பிரேமம்: அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியானது. மலையாளத்தில் வெளியான பிரேமம் தமிழ், தெலுங்கு ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. சென்னையில் 100 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை படைத்தது பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்திருந்தனர்.

 Premam Re-Release: Nivin Pauly, Sai Pallavi Starrer Premam to re-release on February in Tamilnadu

தமிழில் சேரன் இயக்கிய ஆட்டோகிராப் படத்தின் அப்டேட் வெர்ஷனாக தான் பிரேமம் உருவாகியிருந்தது. ஆனால், நிவின் பாலி, மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி இருவரது கேரக்டரும் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆகின. முக்கியமாக சாய் பல்லவியின் மலர் டீச்சர் கேரக்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். பிரேமம் வெற்றிக்குப் பின்னர் சாய் பல்லவி முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.

அதேபோல், பிரேமம் படத்தின் பாடல்களும் ரசிகர்களின் ரிங் டோனாகின. கதை, திரைக்கதை, மேக்கிங், காட்சிகள் என ஒவ்வொரு பிரேமிலும் பிரேமம் படத்தை வேற லெவலில் செதுக்கியிருந்தார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இந்நிலையில் பிரேமம் படத்தை தமிழ்நாட்டில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி அடுத்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிரேமம் திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.

இதனையறிந்த பிரேமம் பட ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர். சென்னையின் மிக முக்கியமான திரையரங்குகளில் பிரேமம் ரீ-ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரீ-ரிலீஸாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. தனுஷின் 3, மயக்கம் என்ன, சூர்யாவின் வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் கடந்த மாதம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.

அதேபோல், அமீரின் பருத்திவீரன் திரைப்படமும் விரைவில் ரீ ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரேமம் மலர் டீச்சரான சாய் பல்லவி தற்போது பான் இந்தியா நடிகையாக கலக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X