விஜய் எனக்கு மாமா.. விஜய்க்கு நான் மாமா.. கோட் படக் கதையை புட்டு புட்டு வைத்த பிரேம்ஜி!
சென்னை: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு புதிய படம் வெளியானால் டிக்கெட் பற்றாக்குறை ஏற்படும் அளவுக்கு மிகப்பெரிய நட்சத்திரமாக உள்ளார் நடிகர் விஜய். ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ள நிலையில், அதையெல்லாம் விட்டு விட்டு விஜய் அரசியலுக்கு போகிறேன் என வெறும் பேச்சுக்கு சொல்லாமல் செயலில் காட்ட முன் வந்து கட்சியை தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தி விட்டார்.
கோட் திரைப்படம் விஜய்யின் கடைசி படம் இல்லை என்றாலும், கடைசிக்கு முந்தைய படமாக மாறப் போகிறது. தளபதி 69 படம் தான் கடைசி படம் என்கின்றனர். கோட் படமே விஜய்க்கு ஒரு ஃபேர்வெல் படமாக கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் தான் வெங்கட் பிரபு இயக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

கோட் படத்தில் நடித்த நடிகர்களான வைபவ் மற்றும் பிரேம்ஜி அமரனின் பேட்டிகள் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன. அதிலும், வெங்கட் பிரபுவின் தம்பியான பிரேம்ஜி படத்தின் கதையை எல்லாம் ஓபனாக பேசி வருவது ரசிகர்களையே ஷாக் ஆக்கியுள்ளது.
ஹீரோ இல்லாமல் கூட படம்: இயக்குநர் வெங்கட் பிரபு ஹீரோ இல்லாமல் கூட படம் எடுப்பாரு. ஆனால், அவரோட தம்பி இல்லாமல் படம் பண்ண மாட்டாரு என இண்டஸ்ட்ரியிலேயே பலரும் கிண்டல் அடித்தாலும் தொடர்ந்து தம்பி பிரேம்ஜியை தனது படங்களில் நடிக்க வைத்து வரும் வெங்கட் பிரபு கோட் படத்திலும் பிரேம்ஜிக்கு தரமான கதாபாத்திரத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த கதாபாத்திரத்தின் சஸ்பென்ஸை படம் வெளியாவதற்கு முன்னமே பிரேம்ஜி போட்டு உடைத்து விட்டார்.

விஜய் எனக்கு மாமா.. நான் விஜய்க்கு மாமா: கோட் படம் தாறுமாறாக இருக்கும் என்றும் அந்த படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தால் கூட அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள் நிச்சயம் என்ஜாய் பண்ணுவீங்க எனக் கூறிய பிரேம்ஜி கோட் படத்தில் வயதான விஜய்யை நான் மாமா என அழைப்பேன். என்னை அவருடைய மகன் விஜய் மாமா என அழைப்பார். சினேகாவின் சகோதரனாக இந்த படத்தில் நான் நடித்திருக்கிறேன் என கதையையே வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஹைப் ஏற்றிய பிரேம்ஜி: இந்த படம் தளபதி ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கே தியேட்டரில் செம ட்ரீட்டாக இருக்கும் என்றும் விஜய் அந்தளவுக்கு மெரட்டி எடுத்து இருக்கிறார். அவருடைய ஆக்ஷன், காமெடி, ஃபன், மேனரிஸம் என எல்லாவற்றையும் ரசிக்கலாம். ஒவ்வொரு 2 நிமிஷத்துக்கும் ஒருமுறை விசில் அடிக்கும் சீன்கள் படத்தில் இருப்பதாகவும் பில்டப்பை உச்சத்துக்கு ஏற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications











