அவ்ளோதான் நோ மேரேஜ்... வாழ்நாள் முழுசும் சிங்கிள்தான்... என்னங்க பிரேம்ஜி இப்படி சொல்லிட்டாரு

சென்னை : சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் பிரேம்ஜி.

Recommended Video

பாடும் நிலா SPB முதலாமாண்டு நினைவு தினம் | SPB -ன் மலரும் நினைவுகள்

இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ள இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியானது மாநாடு.

இவரது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு அவர் தற்போது பதிலளித்துள்ளார்.

நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி

நடிகர் பிரேம்ஜி அமரன் தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பன்முக திறமையை காட்டி வருகிறார். அவரது அண்ணன் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மட்டுமின்றி மற்ற படங்களிலும் இவர் நடித்து வருகிறார். ஹீரோவாகவும் இவர் நடித்து வருகிறார்.

மாநாடு படம்

மாநாடு படம்

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் இவருக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இவரின் டைமிங் காமெடி சென்ஸ் மற்றும் உடல்மொழி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. சென்னை 28 படத்தில் இவரது காமெடி கலாட்டாக்கள் சிறப்பாக பேசப்பட்டன.

பிரேம்ஜி திருமணம்

பிரேம்ஜி திருமணம்

இவர் தற்போது 40 வயதை கடந்துள்ள நிலையில், இவரது சென்னை 28 கேங்கில் உள்ள அனைவரும் திருமணம் முடித்துள்ளனர். இவருக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாக கடந்த ஆண்டில் இவரது தந்தை கங்கை அமரன் தெரிவித்திருந்தார். ஆனால் இவரது திருமணம் குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

எப்போதும் திருமணம் இல்லை

எப்போதும் திருமணம் இல்லை

இந்நிலையில் சமீபத்தில் இணைய இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இவர் தனது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் தன்னுடைய வாழ்நாளில் எப்போதும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். தன்னுடைய பாதை ஆன்மீகத்தை நோக்கியே செல்லும் என்றும் கூறியுள்ளார்.

அதிகமான திருமண ஆஃபர்கள்

அதிகமான திருமண ஆஃபர்கள்

தான் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்திருப்பேன் என்றும் ஆனால் தனக்கு அந்த எண்ணமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு திருமணம் செய்துக் கொள்ள அதிகமான ஆஃபர்கள் வருவதாகவும் ஆனால் தான் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் நடிக்க விருப்பம்

ரஜினியுடன் நடிக்க விருப்பம்

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடிக்க தான் மிகுந்த விருப்பத்துடன் உள்ளதாகவும் அவருடன் இணைந்து ஒரு பிரேமில் நடித்தாலும் அது சிறப்பாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல தளபதியுடன் நடித்தால் ஹேக்கர் ரோலில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இசை ஆல்பங்கள்

இசை ஆல்பங்கள்

தனிப்பட்ட முறையில் ஹிப்ஹாப் பாணியில் இசை ஆல்பங்களை செய்ய தான் விரும்புவதாகவும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தானே அதில் மைக்கேல் ஜாக்சன் போல இசையமைத்து பாடலும் பாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X