பிரேம்ஜியின் ஜாதகத்தில் என்ன இருந்துச்சோ அப்படியே நடந்துடுச்சே.. இப்படி ஒரு விஷயம் இருக்கா?

சென்னை: கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜியின் திருமணம் நேற்று திருத்தணி முருகன் கோயிலில் எளிமையாக நடந்தது. இதில் அவரது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள். அவர் திருமணம் செய்திருக்கும் பெண் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் பிரேம்ஜியின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அதனைப் பார்த்த பலரும் அட ஜாதகத்தில் இருந்தது அப்படியே நடந்திருக்கோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவர் பிரேம்ஜி அமரன். பிரபல இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரான அவர் இப்போது பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் GOAT படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துவரும் அவர்; அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பதால் இப்படத்தில் எந்த மாதிரி நடித்திருப்பார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

Premgi Marriage Indhu

நோ திருமணம்: பிரேம்ஜிக்கு 45 வயது ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தார். அதுகுறித்து கேட்டால் ஜாலியான பதிலையே சொல்வார். அதேபோல் தான் அணிந்து வந்த டி ஷர்ட்டுகளிலும் பெரும்பாலும் நான் ஒரு முரட்டு சிங்கிள் என்ற வாசகம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள்; ஒருவேளை பிரேம்ஜிக்கு திருமணம் மீது சுத்தமாக ஆசை இல்லையோ என்ற கேள்வியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் எழுப்பிவந்தனர்.

திருமணம்: சூழல் இப்படி இருக்க சில வாரங்களுக்கு முன்பு சோஷியல் மீடியாவில் ஒரு திருமண பத்திரிகை புகைப்படம் வெளியானது. அதில் பிரேம்ஜியின் பெயர் இடம்பெற்றிருந்தது. அது ஃபேக் என்று முதலில் ரசிகர்கள் கூறினர். ஆனால் பிரேம்ஜிக்கு திருமணம்தான் என்பதை வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனால் பிரேம்ஜி மட்டுமின்றி அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் திடீரென திருமணமா என்று ஆச்சரியப்படவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பிளாக முடிந்த திருமணம்: அதன்படி நேற்று திருத்தணி முருகன் கோயிலில் பிரேம்ஜியின் திருமணம் நடைபெற்றது. அவர் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர் சேலத்தை சேர்ந்தவர் என்றும்; வங்கியில் பணியாற்றுகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இத்திருமணத்தில் பிரேம்ஜியின் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். சினிமா துறையில் என்று எடுத்துக்கொண்டால் வைபவ், ஜெய், சிவா, அரவிந்த் ஆகாஷ், விஜே ரம்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் பிரேம்ஜி தனது திருமணம் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அதில் அவர், “எனக்கு எனது அம்மா ஒரு விஷயம் சொன்னார். அதாவது, எனக்கு ஜாதகம் பார்த்தாங்களாம். அதில் என்ன போட்டிருக்கு என்றால், எனது மனைவி வந்து என்னிடம், ஏங்க கொடியில் காயும் புடவையை கொண்டு வாருங்கள் என்று சொன்னால்; நான் அந்தப் புடவையை எடுத்து சலவை செய்து மடித்து கொண்டுவந்து தருவேன். அப்படி எனது மனைவி ஒன்று சொன்னால் 10 செய்வேனாம். மனைவியை அப்படி பார்த்துக்குவேனாம்” என்றார்.

அப்படியே நடந்துடுச்சோ: இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகியுள்ளது. மேலும், நமது திருமணத்தை மண்டபத்தில் பிரமாண்டமாக நடத்துவதைவிட திருத்தணி கோயிலில் சிம்பிளாக நடத்தலாம் என்று இந்து சொன்னதாகவும்; அதற்கு பிரேம்ஜி மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் ஒத்துக்கொண்டதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இப்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், அட ஆமா இப்போவே தனது மனைவி சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்துவிட்டாரே. பிரேம்ஜி ஜாதகத்தில் என்ன இருந்ததோ அது நடக்க ஆரம்பிச்சிடுச்சோ என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X