பிரேம்ஜிக்கு ஓவர் கட்டுப்பாடு விதிக்கும் மனைவி.. ரொம்பவே புலம்புறாரே.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகரும் இசையமைப்பாளருமாகிய பிரேம்ஜி அமரன் சில மாதங்களுக்கு முன்பு இந்து என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் திருத்தணியில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்க்கையை நகர்த்திவருகிறார்கள். மேலும் சோஷியல் மீடியாவில் அவர்கள் பகிரும் வீடியோவும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கங்கை அமரன் இளைய மகன் பிரேம்ஜி அமரன். இவரது அண்ணன் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் ஃபேமஸான இயக்குநராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேம்ஜியும் வல்லவன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதற்கு முன்னதாக யுவன் ஷங்கர் ராஜாவிடம் வேலை பார்த்த அவர் பல பாடல்களை பாடியிருக்கிறார்; சில படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். அவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டும் ஆகியிருப்பதால் அவர் தொடர்ந்து இசையமைப்பார் அல்லது பாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஃபேமஸ் நடிகர்: ஆனால் வல்லவன் படத்துக்கு பிறகு பிரேம்ஜிக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. முக்கியமாக வெங்கட் பிரபு இயக்கம் என்றால் அதில் கண்டிப்பாக பிரேம்ஜி அமரன் இருப்பார். சிவகார்த்திகேயன்கூட ஒரு மேடையில் வெங்கட் பிரபு கதை இல்லாமல்கூட படம் எடுப்பார் ஆனால் இவரது தம்பி இல்லாமல் படம் எடுக்கமாட்டார் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு வெங்கட் பிரபுவின் படத்தில் பிரேம்ஜி ஐக்கியமாகிவிடுவார்.
பார்ட்டி நபர்: பிரேம்ஜி அமரன் பல வருடங்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே இருந்தார். அவரிடம் அதுகுறித்து கேட்டால்கூட சிங்கிளாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்றும் கூறுவார். வெங்கட் பிரபுவிடம் கேட்டாலும் பிரேம்ஜியின் திருமணம் பற்றி ஜாலியான கமெண்ட்ஸையே கொடுப்பார். இதுஒருபக்கம் இருக்க பிரேம்ஜி என்றாலே செமயாக பார்ட்டி செய்யும் நபர் என்பது திரைத்துறையில் உள்ள அனைவருக்குமே தெரியும். பிரேமும் அதனை சில பேட்டிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
காதல்: அவரது வாழ்க்கை இப்படி போய்க்கொண்டிருந்த சூழலில் இந்து என்பவரை அவர் காதலித்தார். இன்ஸ்டாகிராமில் அவர்களது காதல் மலர்ந்தது. இந்து சேலத்தை சேர்ந்தவர் என்பதும்; தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரது காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை அடுத்து திருத்தணியில் அவர்களின் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தை வெங்கட் பிரபுதான் முன்னின்று நடத்திவைத்தார். இப்போது இந்து கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரேம்ஜி பேட்டி: திருமணத்துக்கு பிறகு பிரேம்ஜி ஆளே மாறிவிட்டார். சமையல் செய்வது உள்ளிட்ட வீடியோக்களை இந்து சோஷியல் மீடியாவில் பகிர்வார். அது ட்ரெண்டாகும். மேலும் பிரேம்ஜி மாமியார் மசாலா என்கிற பெயரில் இந்துவின் தாய் மசாலா தொழிலையும் ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு பிரேம்ஜி அளித்த பேட்டியில், "திருமணம் ஆன பிறகு வாழ்க்கை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்ன ஒன்று முன்னர் போல் பார்ட்டி செய்ய முடியவில்லை. அதற்கான அனுமதியை மனைவி கொடுப்பதில்லை. அப்போதெல்லாம் பயங்கரமாக பார்ட்டி செய்து நண்பர்களோடு ஜாலியாக ஊர் சுற்றிக்கொண்டிருப்பேன். இப்போதெல்லாம் இரவு 11 மணி ஆகி வீட்டுக்கு வரவில்லை என்றால் உடனே மனைவி ஃபோன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க ஆரம்பித்துவிடுகிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











