Premgi: இப்பதான் திருமணம்.. அதற்குள்ளாகவா.. பிரேம்ஜி வீட்டில் விசேஷம்!

சென்னை: நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியின் திருமணம் சமீபத்தில் நடந்த நிலையில் திருமணம் ஆனது முதல் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்து இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இசையமைப்பாளர், பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் தான் பிரேம்ஜி. வெங்கட் பிரபு முதன் முதலாக இயக்கியிருந்த படம் சென்னை 600028. 2007 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில், இவர் பேசிய "என்ன கொடுமை சார் இது" என்ற வசனம் இவரை மேலும் பிரபலமாக்கியது.

premgi amaren instagram

நடிகர் பிரேம்ஜி: திருமண வயதை கடந்த போதும், திருமணம் செய்து கொள்ளாமல், பேச்சுலராக இருந்த பிரேம்ஜிக்கு ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவுக்கும் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 9ந் தேதி திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் சென்னை 28 படத்தில் நடித்த ஜெய்,வைபவ், மிர்ச்சி சிவா, சங்கீதா,க்ரிஷ் கலந்து கொண்டனர். முரட்டு சிங்கிளான பிரேம்ஜிக்கு ஒருவழியாக திருமணமானது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரைத்துறை நண்பர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. 45 வயதான பிரேம்ஜி, 25 வயதான இந்துவை திருமணம் செய்து கொண்டார் என்றும், இத்தனை வயசு வித்தியாசமா என்றும் இணையத்தில் செய்திகள் வெளியானது.

premgi amaren instagram

வீட்டில் விசேஷம்: திருமணத்திற்கு பிறகு மனைவியை கலாய்த்து, தன்னையே கலாய்த்து இன்ஸ்டா ஸ்டோரியில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார் பிரேம்ஜி. அதை பார்க்கும் ரசிகர்களோ, திருமணமானாலும் பழைய குசும்பு போகாமல் ஜாலியாத் தான் இருக்கீங்க போலயே என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரேம்ஜிக்கு திருமணமாகி மூன்று மாதம் முடிவடைந்த நிலையில் தாலி பிரித்துக் கோர்க்கும் விஷேசம் நடந்துள்ளது. அந்த வீடியோவை பிரேம்ஜியின் மனைவி இந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவிற்கு கேப்ஷனாக, முருகப்பெருமானால் வழிநடத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட எங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குகிறோம். அன்பு, விசுவாசம் மற்றும் அவருடைய இறைவனின் பாதுகாப்போடு, ஒவ்வொரு அடியிலும் நாம் தயாராக இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X